மாவீரர்களுக்கு பாராளுமன்றில் அஞ்சலி: யோகேஸ்வரன் எம்.பி ஆற்றிய உரை
பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் ஆற்றிய உரையின் முழுவடிவம்
2014ம் ஆண்டை மையாக கொண்டு தற்போதைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட வரவு செலவு திட்டமானது வறிய மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதாக அமையாது தமது அரசியல் இருக்கையை பாதுகாக்கும் நோக்கில் சில உயர் அதிகாரிகளை தம்வசம் வைக்கும் ஒரு வரவு செலவு திட்டமாகவே உள்ளது.
பொதுவாக கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்த சூழலாலும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு வாழ் மக்களின் இயல்பு வாழ்கைக்கு உதவும் வகையில் உதவிகள் வழங்கும் திட்டம் எதுவும் இவ்வரவு செலவு திட்டத்தில இல்லை.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த கால யுத்தத்தால் இடம்பெயர்ந்த 85000க்கு மேற்பட்ட மக்கள் இன்னும் குடியேற்றப்படாத நிலையிலும், குடியேற்றப்பட்ட மக்களுக்கான வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் முற்றுமுழுதாக ஏற்படுத்தப்படாத நிலையிலும் இவ்வரவு செலவுத் திட்டத்தில் மீள்குடியேற்றத்திற்கான எந்த நிதி ஒதுக்கீடும் இடம்பெறவில்லை. சென்ற ஆண்டிலும் இதே தவறை இவ்வாரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் காட்டியுள்ளது.
யுத்தம் ஓய்வடைந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் வடக்கு கிழக்கில் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அகதி முகாம்களிலும், தார் பாச் எனப்படும் படங்குகளிலும் குடியமைத்து வாழ்ந்து வரும் நிலையில் இம்மக்கள் நிலை சார்பாக இவ்வரசாங்கம் சிறிதும் சிந்திக்காமல் இவ்வரவு செலவு திட்டத்தை வரைந்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு தொடக்கம் 2007ம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு 13893 முழுச்சேதம் அடைந்த வீடுகள் வழங்கப்பட வேண்டிய நிலையில் இதுவரை 3918 வீடுகளே 14 பிரதேச செயலகப் பிரிவிலும் வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் 9975 வீடுகள் வழங்கப்பட வேண்டும். இம்மக்கள் இன்னும் சிறு குடிசைகளில் பல துன்பங்களுக்கு மத்தியில் வாழ்கின்றனர். இவர்களுக்கு வீடு அமைப்பதனால் மூன்று அரை இலட்சம் ஒரு வீட்டுக்கு என்ற வகையில் கிட்டத்தட்ட 324 மில்லியன் தேவை.
அதுமட்டுமின்றி வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து கிழக்கு மாகாணத்தில் குடியேறிய குடும்பங்களில் கிட்டத்தட்ட 1500 குடும்பங்களுக்கு மேல் நிரந்தர வீட்டு வசதி இன்றி மிகவும் கஷ்ரப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களுக்கு அடிப்படை உதவியாக வழங்கப்படும் 25,000 ரூபா பணமானது வெல்லாவெளி பிரதேசம், வாகரைப் பிரதேசம் ஆகிய இரண்டுக்குமே முற்றுமுழுதாக வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் ஏனைய பிரதேசங்களில் மீள்குடியேறிய 29851 குடும்பங்களுக்கு இன்னும் இவ் உதவி வழங்கப்படவில்லை. கிட்டத்தட்ட இதற்கு 746 மில்லியன் தேவை. அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் சுற்றிக்கை இந்நிதி வழங்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியும் அரசாங்கம் இது சார்பாக எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
அத்தோடு யுத்த சூழலால் உயிர் இறந்தவர்கள், அங்கங்களை இழந்தவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகை பல மில்லியன் கணக்கில் இன்றுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கப்படாமல் உள்ள நிலையில் இவ்வரவு செலவு திட்டத்தில் கடந்த யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் உள்ள 910000 கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதாரம் சார்பாகவோ அல்லது 20000க்கு மேற்பட்ட பெற்றோரை இழந்த பிள்ளைகள் சார்பாகவோ பல ஆயிரக்கணக்கான உடல் உறுப்புக்களை இழந்த விசேட தேவைக்குரியவர்கள் சார்பாகவோ இவ்வரவு செலவுத் திட்டம் எதனையும் வெளிப்படுத்தவில்லை.
பொதுவாக வரவு செலவு திட்டமானது விவசாயிகள், மீனவர்கள், உழைக்கும் வர்க்கத்தினர், அரச தனியார் துறையினர் என சகல பகுதி மக்களின் வாழக்கைக்கு உதவுவதாக அமையவில்லை.
இவ்வரவு செலவு திட்டத்தில் கைத்தொழில் சாலைகளை உருவாக்குவது சார்பாகவோ வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் சிதைக்கப்பட்ட கைத்தொழில் சாலைகளை புனரமைப்பது சார்பாகவோ எவ்வித ஒதுக்கீடுகளும் வரவு செலவு திட்டத்தில் இல்லை.
குறிப்பாக கடந்த கால யுத்தத்தால் வடக்கு கிழக்கு மாகாணத்தில் பல கைத்தொழில் சாலைகள் அழிக்கப்பட்டுள்ளது, சில புனரமைக்க வேண்டியுள்ளது. குறிப்பாக வட மாகாணத்தில்
1. பரந்தன் இராசாயன கூட்டுத்தாபனம்
2. ஆனையிறவு உப்புக் கூட்டுத்தாபனம்
3. வட்டக்கச்சி அரசினர் விவசாய பண்ணை
4. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை
5. நீர்வேலி கண்ணாடி தொழிற்சாலை
6. நாவற்குழி அன்ரிஸ் இறால் கொம்பனி
7. ஒட்டிசுட்டான் ஒட்டுத் தொழிற்சாலை
8. கிளிநொச்சி ஸ்கந்தபுரம் சீனித் தொழிற்சாலை என்பன முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இவை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்.
மேலும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை தேசிய கடதாசி கம்பனி. கும்புறுமூலை அச்சகம், தேவபுரம் அரிசி ஆலை, மண்டூர் ஓட்டுத் தொழிற்சாலை உட்பட்ட பல தொழிற்சாலைகள் புனரமைக்கப்பட்ட வேண்டி உள்ளது.
இவைகளை உருவாக்கியும், புனரமைத்தும் தொழிற்சாலைகளை இயங்கச் செய்தால் இன்று கல்வி ரீதியாக பட்டம் பெறாமல் உள்ள இளைஞர், யுவதிகள், கணவனை இழந்த பெண்கள், தொழில் வாய்ப்பை பெற்று தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். ஆனால் இப்பகுதியில் பெரும்பான்மையான மக்கள் தமிழ் பேசும் இனங்கள் என்பதனாலேயே அரசாங்கம் அதில் அக்கறையின்றி செயற்பட்டு வருகின்றது.
வடக்கு பகுதியில் ஆடைத் தொழிற்சாலைகள் மிகக் குறைவாகவே நிறுவியுள்ளது. யுத்த பாதிப்பை நோக்காகக் கொண்டு ஆடைத்தொழிற்சாலைகளை நிறுவி தொழில்வாய்ப்பை மேற்கொள்ள முடியும்.
குறிப்பாக அதுமட்டுமின்றி வடக்கு கிழக்கு பகுதிகளான பெரும்பான்மை ,ன மக்கள் ஒரு போதும் வாழாத பகுதிகளிலும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை எற்படுத்தி வருவதுடன் இராணுவத்தின் உதவிடன் பௌத்த விகாரைகளை தாபித்திருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இராணுவ முகாம்களில் 23க்கு மேற்பட்ட பௌத்த விகாரைகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் இங்கிருந்து வெளியேறும் போது இப்பகுதி பௌத்த குடியிருப்பாக மாறும் நிலை தோன்றியுள்ளது.
இன்று யுத்த காலத்தில் இடம்பெறாத பல சம்பவங்கள் தற்போது ஆரம்பமாகி உள்ளது. வடக்கு கிழக்கு பகுதியிகளில் மக்களை கிறிஸ் மனிதன் மூலம் பயப்படுத்தினார்கள். ஆனால் தற்போது ,ந்து கோயில்களை உடைத்து கொள்ளை இடுவது, இந்து ஆலயங்கள் இடித்து பௌத்த விகாரை தாபிப்பது, அண்மையில் வடக்கு பகுதியில் மாத்திரம் 26 ஆலயங்கள் கொள்ளை இடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
1. கொடிகாமம் வரணியில் உள்ள 300 ஆண்டு பழமை வாய்ந்த கண்ணகி அம்மன் ஆலயம் சிலை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
2. பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோயில் 150 பவுன் நகை கொள்ளை
3. வண்ணர்பண்ணை நாச்சிமார் கோயில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு தேர்முட்டியில் இட்டது.
4. முல்லைத்தீவு மாவட்ட கொக்குவாய் கொக்குத் தொடுவாய் ஆலய கொள்ளைகள்.
போன்றவற்றை உதாரணமாக கூறலாம்.
அதுமட்டுமின்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில கடந்த வருடம் ஆனி மாதத்தில் ஏற்பட்ட நகை கொள்ளை இது சார்பாக பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டும் ,ன்றுவரை எதுவித விசாரணையும் நடைபெற்றாதாக தெரியவில்லை. பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதேச அபிவிருத்திக் கூட்டம் என்பவற்றின் கவனத்திற்கு கொண்டு வந்தும் எதுவித விசாரணையும் இல்லை.
மேலும் தம்புள்ளை பகுதியில் 30 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்த தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டதுடன், அவர்களது வழிபாட்டு தலமும் உடைக்கப்பட்டது. இது அப்பகுதியில் பௌத்த வழிபாட்டு தலத்தின் குளம் அமைப்பதற்காக ,ச்செயற்பாட்டை புரிந்துள்ளனர். இவ்விடயமாக அரசாங்கம் பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இன்று இனரீதியாக மாத்திரமின்றி மதரீதியாகவும் இந்நாட்டின் தேசிய ,னங்களை துன்புறுத்தும் நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நாட்டின் தேசிய ,னங்களின் மனித உரிமையை பாதுகாக்க முடியாத அரசாங்கம் அண்மையில் பொதுநலவாய மகாநாடு என்னும் சர்வதேசத்தை ஏமாற்றும் நாடகத்தை அரங்கேற்றி தோல்வி கண்டுள்ளது.
குறிப்பாக இலங்கையின் வரவு செலவுத் திட்ட பற்றாகுறையானது தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமே உள்ளது. அதாவது அரசாங்கத்தினது எதிர்பார்த்த வருமானத்தை விட அரசாங்கத்தினது செலவானது மிக உயர்வாக காணப்படுகின்றது. இந்நிலையானது அரசாங்கத்தினது இறைக் கொள்கையின் திட்டமிடலில் காணப்படும் குறைபாட்டினையே தெளிவுபடுத்துகின்றது.
இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியில் இலங்கை தலா வருமானத்தில் ஆசியாவிலே மிக உயர்வான இடத்தினை வகித்து வந்தது. அதாவது ஐப்பான், மலேசியா என்பவற்றுக்கு அடுத்ததாக இலங்கை 3வது செல்வந்த நாடாக ஆசியாவில் திகழ்ந்தது.
இலங்கைக்கு அடுத்த படியாகவே சௌத்கோரியா, தாய்லாந்து, ,ந்தனோசியா, சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகள் காணப்பட்டது. இன்று இலங்கையின் துண்டு விழும் தொகை நிலையை வைத்து என்ன என்பதை சிந்திக்கும் போது இதும் ஆசியாவில் ஒரு ஆச்சரிய நாடாகவே காட்டுகின்றது.
எமது வடக்கு கிழக்கு மக்கள் பாலங்களையும், பெரும் தெருக்களையும் எதிர்பார்க்க வில்லை. தங்களது பூர்வீக மண்ணில் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும், எதுவித தடையுமின்றி தங்களை தாங்களே ஆட்சி செலுத்தி கொண்டு வாழவே விழும்புகின்றனர்.
அத்தோடு தங்களது காணமல், பறிகொடுத்த உறவுகளையும், சிறைக் கூடங்களில் அடைக்கப்பட்ட உறவுகளையும், தங்களால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகளையும் தங்களிடம் கையளிக்குமாறு கோரி நிற்கின்றனர்.
இதை விடுத்து சகல வித மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான மீறல்களை புரிந்து கொண்டு, சர்வதேசத்தை ஏமாற்றவும், தங்களது அபிலாசைகளை தீர்க்கவும், இராணுவத்தினரின் போக்குவரத்துக்கு உதவும் நோக்காக கொண்டே இவ் வீதி அமைப்பு, பாலங்கள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இது கடந்தகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு உதவும் நோக்கில் அமைந்ததாக இல்லை.
ஒரு நாட்டின் அரசாங்கம் என்ற வகையில் இவற்றை புரிதல் அவர்களது கடமை. இதற்காக இதிலும் முக்கியமாக ஒரு தேசிய இனம் எதிர்பார்க்கும் அவசிய தேவைகளை நிறைவேற்றாது தமது சுயவிருப்பு தேவையை மேற்கொள்ள முயல்வது ஒரு அரசாங்கத்துக்கு உகந்ததல்ல என்பதை தெரிவிக்கின்றேன்.
இலங்கை அரசின் தலைவர் இலங்கை என்னும் ஆணை பெற்ற நம்பிக்கை நிறுவனத்தின் அரசாங்க நம்பிக்கை பொறுப்பாளர். இவர் பயனானிகளின் நன்மை கருதி செயற்பட வேண்டும். இவ்வேளை தான் இலங்கை நாட்டின் தலை சிறந்த தலைவராக இவரை கருத முடியும்.
இவ்வேளை வடக்கு கிழக்கு தமிழ் மக்களை புறம் தள்ளி விட்டு பல்லின மக்கள் வாழும் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இன வர்க்கத்தின் தலைவராக ஒரு நாட்டின் தலைவர் செயற்படுவது ஒரு ஜனநாயக நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயற்பாடாகும்.
இன்று இவ்வரவு செலவு திட்டத்தில் 20000 கால் நடைகளை இறக்குமதி செய்வது சார்பாக ,வ்வரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கால்நடை மேச்சல் தரைகள் பலவற்றை தற்போது வெளி மாவட்டங்களில் வசிக்கும் ஊர்காவல் படையினர் மற்றும் பெரும்பான்மை இனத்தவர்கள் கைப்பற்றி உள்ளனர். இதனால் 270000க்கு மேற்பட்ட கால் நடைகளுக்கான மேச்சல் தரை பாதிப்பு இன்று கால்நடை பண்ணையாளர்களும், விவசாயம் செய்யும் விவசாயிகளும் பெரிதும் பாதித்துள்ளனர்.
வெளிமாவட்ட பெரும்பான்மை இன மக்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்துமீறி காணி பிடித்து விவசாயத்தில் ஈடுபடுவதற்கு இராணுவத்தினர் பெரும் உதவி வருகின்றனர். கிழக்கு மாகாண சபை, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் போன்றவற்றின் கவனத்திற்கு கொண்டு வந்தும் இன்று ஒரு நிலையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இவ்விடயம் சார்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள், கால் நடை பண்ணையாளர்களின் தொழில் முயற்ச்சியை பாதுகாக்குமாறு இச்சபையில் வேண்டுகோள் விடுகின்றேன்.
வடக்கு கிழக்கு மாகாணங்களை ,ராணுவ கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தமிழ் மக்களை அடக்குவதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஒடுக்க அரசாங்கம் முற்படுகின்றது.
பொதுவாக இன்று 150000க்கு மேற்பட்ட இராணுவம் வடக்கு கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்தும் எதற்கு இத்தொகை இராணுவம், வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாத்திரமே இராணுவத்தின் இருந்தவர்களை அளுனர்களாக வைத்துள்ளது இது எதற்காக என இச்சபையை கேட்க விரும்புகின்றேன்.
இன்று 12 ஆயிரம் போராளிகளை இயல்பு வாழ்க்கைக்கு விடுவித்துள்ளதாக கூறும் இவ்வாரசாங்கம் ஏன் அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடவில்லை. அதுமட்மின்றி யுத்தம் முடிந்து 4 வருடங்களுக்கு பின்பே காணாமல் போனேர் பற்றி விசாரிக்கும் ஆணைக்குழு இது சர்வதேசத்தையும், ஐக்கிய நாடுகள் சபைiயும் ஏமாற்றும் முயற்சி.
இலங்கையில் சரித்திரத்திலேயோ ஆணைக்குழு தாபிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் ஏற்பட்ட பயன் என்ன என்றால் பூச்சியமே. கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக அமுல்படுத்த தவறும் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வை வழங்குமா என்பது கேள்விக்குறியே.
வரவு செலவுத் திட்டத்தில் உடல் உறுப்புக்கள் பாதிக்கப்பட்ட விசேட தேவைக்குரியவர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபாய் வழங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு சிலருக்கே பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்படுகின்றது. பலருக்கு இவ்உதவி வழங்கப்படுவதில்லை.
இதனால் இவ்விசேட தேவைக்குரியவர்கள் வடக்கு கிழக்கு மாகாணத்தில் கடந்த யுத்தத்தினால் அதிகரித்துள்ள நிலையில் இவர்களின் சுயதொழில் முயற்சிகளை மேம்படுத்துவதற்கும், வாழ்வாதார முயற்சிகளை மேம்படுத்துவதற்கும், போதுமான நிதி ஒதுக்கீடு இங்கு இடம்பெறவில்லை.
இன்று வடக்கு கிழக்கில் பெருகியுள்ள கணவனை இழந்த பெண்கள், வறுமைக் கோட்டில் வாழும் பெண்கள், தங்களது அன்றாட வாழ்க்கைக்கு வேலை தேடி வறிய குடும்ப தலைவர், தலைவி வேலை தேடி பணிப்பெண்களாக, வேலையாட்களான கீழைத்தேய நாடுகளுக்கு செல்கின்றனர். இவர்களின் பணிப்பெண்ணாக செல்லும் பலர் வீட்டு எஜெமானால் பாலியல் துஸ்பிரயோகத்துக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். அத்தோடு இவர்களது பிள்ளைகள் பெற்றோர்களின் கண்காணிப்பில் இன்மையால் பலர் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கும் ஆளாகின்றனர். பிள்ளைகள் பெற்றோரை பிரிந்து உளரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக 2010 தொடக்கம் 2013 வரை காலப்பகுயில் தாய் தந்தை வெளிநாடு சென்றதால் எமது நாட்டில் 1661 சிறுவர்கள் சிறுவர் துஸ்பிரயோகத்துக்கு ஆளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு காரணம் அவர்களுக்கான ஒழுங்கான சுயதொழில் மற்றும் தொழில் எற்பாடுகள் எமது நாட்டில் மேற்கொள்ளப்படாமை. இவ்விடயமாக 2014ம் ஆண்டுக்கான இவ்வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித எற்பாடுகளும் இவ்வரசாங்கத்தால் மேற்கொள்ளவில்லை.
ஆனால் இராணுவத்திற்கு இவ்வரசாங்கம் மாடி வீடு கட்டுவதில் காட்டும் அக்கறையை கடந்த யுத்த சூழலால் கணவனை இழந்தும், வறுமையாலும் குடும்பத்தை கட்டியெழுப்ப முடியாத தமது வாழ்வாதாரத்தினை பற்றி ஏங்கி கொண்டிருக்கும் எம் மக்கள் மீது ஏன் அக்கறை காட்டக் கூடாது.
இவ்வரவு செலவுத் திட்டத்தில் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியதாக பெருமை கொள்ளும் இவ்வரசாங்கம் மின்சாரத்தின் கட்டணத் தொகையை அதிகரித்ததன் மூலம் வறிய மக்கள் கஷ்ரப்படுகின்றது. அத்தோடு அவர்களது பொருளாதார சுமையை பொருட்களுக்கு பெரும் விலையேற்றம் மூலம் வறிய மக்கள் மிகவும் கஷ்ரப்படுகின்றனர்.
உத்தியோகதத்தர்களுக்கு அரசாங்கம் சம்பளத் தொகையை அதிகரித்துள்ளது. அதாவது குலைத்து வரும் நாய்க்கு எழும்புத் தண்டு ,டுவது போல. தற்போதைய விலைவாசி அடிப்படையில் இச்சம்பளத்தை பத்தாயிரம் ரூபாவாக அதிகரித்தால் மாத்திரமே மக்கள் வாழ்க்கையை சீராக நடாத்த முடியும்.
2014ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பிரிவேனா பாடசாலை கல்வி என்ற ரீதியில் பௌத்தத்திற்கும், பௌத்த குருமார் கல்விக்கு பெரும் தொகை நிதியை வழங்கியுள்ள வேளை இந்நாட்டின் ஏனைய மதங்களாக இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத கல்விகளுக்கு மற்றும் அவர்களது அறக்கல்விகளுக்கு எதுவும் ஓதுக்கவில்லை. ஏனெனில் பௌத்த மதத்துக்கு மாத்திரமே இங்கு தனி அந்தஸ்து வழங்கப்படுகின்றது. ஏனைய மதங்கள் ,வ்வரசாங்கத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டும் வருகின்றது. இங்கு மத உரிமைகள் ஒடுக்கப்படுகின்றது.
கடந்த வரவு செலவு திட்டத்தின் போது பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பாதணி வழங்குவதாக குறிக்கப்பட்டது. ஆனால் இச்செயற்பாடு இவ்வாண்டில் இன்றுவரை இடம்பெறவில்லை. அதன் தொடர் செயற்பாடு கூட இவ்வருட ஒதுக்கீட்டிலும் எதுவும் குறிப்பிடவும் இல்லை.
வனஜீவராசிகள் ஊடுருவலை தடுக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக இவ்வரவு செலவு திட்டம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஊழியர்களுக்கான கொடுப்பனவு, வாகன கொள்வனவு என்பவற்றுக்கே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வனஜீவராசிகளின் ஊடுறுவலை தடுக்க மின்சார வேலி இடுவதற்கும், வேறு வகைகளை கையாளவோ வன ஜீவராசிகள் ஊடுருவலை தடுப்பதற்கோ இந்நிதியில் சுட்டிக்காட்டப்படவில்லை.
ஆகவே மீன்பிடி தொழில் சார்பான ஒதுக்கீடுகள் சில இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் ஒதுக்கீடுகள் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களான இவ்விரு மாகாணங்களிலும் கூடுதலாக உற்பத்திகள் பயன்படுத்தப்படுகின்றது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மகாhணம் என்ற வகையில் கவனிக்கப்பட வேண்டும். காரணம் 1983ம் ஆண்டுக்கு முன்னர் வடமாகாணமானது மீன்பிடியில் 25 சதவீத பங்களிப்பினை இந்நாட்டின் மீன்பிடி உற்பத்தியில் வழங்கியுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.
இன்று பனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்ட போராளிள் பலர் அடிக்கடி இராணுவ புலனாய்வு பிரிவினர் விசாரணைகளுக்கு 7 நாட்களுக்கு ஒரு தடவை உட்படுகின்றனர். இதனால் வெளியில் செல்ல முடியாத வாறும், தொழில் செய்ய முடியாதவாறும் தடுக்கப்படுகின்றனர். இவர்களால் உள ரீதியாக துன்புறுத்தலுக்கும் தமது உயிரை பாதுகாக்கும் வகையில் கடல்மார்க்கமாக வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்டு ஆபத்தான நிலைகளை எதிர்கொள்கின்றார்கள்.
இப்புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்களுக்கன ஒரு நிலையான தொழில் முயற்சி திட்டத்தை இவ்வரவு செலவு திட்டம் ஏற்படுத்தி அவர்களை சுதந்திரமாகவும், புலனாய்வு பிரிவின் துன்புறுத்தல் இன்றியும் வாழும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என இச்சபையில் கோரிக்கை விடுகின்றேன்.
வரவு செலவுத் திட்டம் என்பது அரசாங்கம் தனக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கின்ற வருமானங்களையும், அதற்கான வழிமுறைகளையும் தான் எதிர்காலத்தில் மேற்கொள்ள இருக்கும் செலவினங்களையும், முற்கணிப்பு செய்து நிதி அமைச்சரால் தாயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தினால் எற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுவதாகும்.
ஒரு சிறந்த வரவு செலவு திட்டமானது நாட்டுக்கும் நாட்டு மக்களது பொருளாதாரம் மற்றும் மக்களது வாழ்க்கைத் திறன் பொருளாதார வளர்ச்சி பொருளாதார வசதி நிலை போன்றவற்றினை மேன்படுத்தக் கூடிய நிலையே அமைய வேண்டும். ஆனால் இவ்வரவு செலவு திட்டம் இவ்வாறு அமையவில்லை என்பதை சுட்டிக்காட்டி நிறைவு செய்கின்றேன்.
மாவீரர்களுக்கு பாராளுமன்றில் அஞ்சலி: யோகேஸ்வரன் எம்.பி ஆற்றிய உரை
Reviewed by Author
on
November 28, 2013
Rating:

No comments:
Post a Comment