வடக்கில் புலனாய்வாளர்களின் அடாவடித்தனத்தை நிறுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை உட்பட மனிதாபிமான பணியாளர்கள்இ மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கு தொடர்ச்சியாக புலனாய்துத்துறையினரினால் நேரடியாகவும்இதொலைபேசியூடாகவும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக காணாமல் போன உறவுகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கே குறித்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டே செல்கின்றது. இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்தால் உரிய முறையில் விசாரணைகளை செய்வதில்லை என தெரிய வருகின்றது.
இதனால் காணாமல் போன உறவுகளை கண்டு கொள்வதற்காக அவர்கள் மேற்கொண்டு வரும் அமைதி வழிப்போராட்டங்கள் கூட கை விடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த புலனாய்வாளர்கள் இரவு நேரங்களிலே விசாரணைகளுக்காக வீடுகளுக்கு செல்லுவதாக தெரிய வருகின்றது.
இதனால் பெண்கள் பாரிய அச்சத்தை எதிர் நோக்குகின்றனர். விசாரனைக்காக வீடுகளுக்குச் செல்லுகின்ற போது பெண் பொலிஸர் அழைத்துச் செல்லப்படாமல் பெண்களை விசாரணை செய்கின்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டே செல்லுகின்றது.
இவர்கள் யார்? என்பது தெரியாத நிலையில் எவ்வித சீருடையும் இன்றி சாதாரண உடையில் அரச புலனாய்வுத்துறை என சென்று விசாரனைகளை மேற்கொள்ளுகின்றனர்.
இதனால் அவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.
எனவே வடமாகாணத்தில் உள்ள தமிழ் மக்கள் மீதும் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மீதும் புலனாய்வுத்துறையினர் மேற்கொண்டு வரும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவர்கள் மீதான இந்த சம்பவங்களுக்கு அரசே உரிய பதிலை கூறி இவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விடயத்தில் சர்வதேச சமூகம் உரிய கவனம் செலுத்த வேண்டும். என குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கில் புலனாய்வாளர்களின் அடாவடித்தனத்தை நிறுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
Reviewed by Author
on
November 24, 2013
Rating:
No comments:
Post a Comment