மன்னார் நகர சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்
-ஆசிய அபிவிருத்தி நிறுவனத்தின் உதவியுடன் இடம் பெற்ற வரவு செலவு திட்டம் சமர்ப்பிப்பதற்காண ஆரம்ப கட்ட விசேட கூட்டத்தில் மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாசன்,மன்னார் உள்ளுராட்;சி உதவியாளர் எம்.ஏ.துரம்,வவுனியா நகர சபையின் கணக்காளர் கே.கஜேந்திரன்,ஆசிய அபிவிருத்தி நிறுவனத்தின் வடமாகாண இணைப்பாளர் கே.சசிதரன், மன்னார் நகர சபையின் செயலாளர் பிரிட்டோஇபொது அமைப்புக்கள்,நகர சபை உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து மன்னார் நகர சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிப்பதற்காண ஆரம்ப கட்ட நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக மன்;னார் நகர சபை உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ் தெரிவிக்கையில்
2014 ஆம் ஆண்டு மன்னார் நகர சபைக்குற்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் நன்மை பெறக்கூடிய வகையில் இந்த வரவு செலவுத்திட்ட ஆரம்ப நிகழ்வு இடம் பெற்றது.
இதற்;கு அனுசரனையை ஆசிய அபிவிருத்தி நிறுவனம் வழங்கியிருந்தது.
-இந்த நிகழ்வில் வர்த்தக சங்கம்,மீனவ சமாசம்,மாதர்இசிராம சங்கங்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
-வரவு செலவுத்திட்டத்திற்காண முன் மொழிவுகள் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவை தயரிக்கப்பட்டு மன்னார் நகர சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்படும்.பின் அது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்
Reviewed by Author
on
November 24, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment