ஆஸியிலிருந்து 79பேர் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டனர்
அரசாங்கத்தின் புதிய கொள்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 'நீங்கள் படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா வந்தால்இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவீர்கள்' எனும் கடுமையான செய்தியையும் அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடிவரவுக் கொள்கை முன்னொருபோதும் இல்லாதவாறு கடுமையாக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 2012 ஒக்டோபர் மாதத்திலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற 1,100க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
'கடத்தல்காரர்களுக்கு பணம் செலுத்துவோர் தமது உயிரை ஆபத்துக்கு உள்ளாக்குவதுடன் பணத்தையும் வீணடிக்கின்றனர். இங்கு அவர்களுக்கு விஸா கிடைக்காது. இவர்கள் எதற்காக பணம் கொடுத்தார்களோ அது அவர்களுக்கு கிடைக்காது.
அதனால் இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவர். அவுஸ்திரேலிய அரசாங்கம் படகு மூலம் வருவோரை திருப்பி அனுப்புவதை தொடர்ந்து முன்னெடுக்கும்' என்று அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆஸியிலிருந்து 79பேர் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டனர்
Reviewed by Author
on
November 23, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment