உதைபந்தாட்ட சம்மேளன தலைவரின் வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டிகளில் மன்னார் பனங்கட்டுகொட்டு சென் ஜோசப் விளையாட்டு கழகம் வெற்றி -படங்கள்
உதைபந்தாட்ட சம்மேளன தலைவரின் வெற்றிக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட இறுதி போட்டிகள் இன்று மாலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
உதைபந்தாட்ட சம்மேளன தலைவரின் வெற்றிக்கிண்ணத்திற்கான குறித்த போ ட்டிகளில் மன்னார் மாவட்ட விளையாட்டு கழகங்கள் பங்குபற்றின.
கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்று வந்த குறித்த போட்டிகளின் இறுதிநாளான இன்று சென்ஜோசப் விளையாட்டுக் கழகம் மற்றும் கிறின்பீல்ட் விளையாட்டுக்கழகம் என்பன ஒன்றை ஒன்று எதிர்த்;து விளையாடியிருந்தன.
இறுதியில் 2-1 என்ற கோல்கள் அடிப்படையில் சென் ஜோசப் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் தி.குருகுலராஜா, கௌரவ விருந்தினராக வடமாகாண கடற்றொழில்,போக்குவரத்து , கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான பிறிமுஸ் சிராய்வா , ஆர்னோல்ட் ,மன்னார் நகரசபை முதல்வர் எஸ்.ஞானபிரகாசம் மற்றும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் றஞ்சித் றொட்றிகோ ,மன்னார் நகரசபை உறுப்பினர் டிலான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் வெற்றியீட்டிய கழகங்கள், வீரர்களுக்கு அதிதிகளினால் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இதேவேளை இரண்டு கழகங்களும் அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவித்தனர்.
உதைபந்தாட்ட சம்மேளன தலைவரின் வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டிகளில் மன்னார் பனங்கட்டுகொட்டு சென் ஜோசப் விளையாட்டு கழகம் வெற்றி -படங்கள்
Reviewed by Author
on
November 03, 2013
Rating:
No comments:
Post a Comment