யாழ், பல்கலைக்கழக நடனத்துறை மாணவர்கள் நடத்தி வந்த வகுப்பு பகிஸ்கரிப்பு சுமூகமான முறையில் தீர்க்கப்பட்டது
யாழ்ப்பாணம் பல் கலைக்கழக நுண்கலைப் பீடத்தில் கடந்த எட்டு நாட்களாக
நடனத்துறை மாணவர்கள் நடத்தி வந்த வகுப்பு பகிஸ்கரிப்பு சுமூகமான முறையில் தீர்க்கப்பட்டதைத் தொடர்ந்து நாளை திங்கள் கிழமை முதல் வழமை போன்று வகுப்புக்களுக்கு மாணவர்கள் செல்லவுள்ளார்கள் .

யாழ்ப்பாணம் பல் கலைககழக கலைப் பீடாதிபதி வி.பி. சிவநாதனினால் கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட மாணவிகளின் நடனத்துறை பிரச்சனைகளுக்கான தீர்வை எட்டும் வகையில் ஆறு பேர்களைக் கொண்ட உபகுழு ஒன்று நியமனம் செய்யப்பட்டது .
இந்தக் குழவில் இடம் பெற்ற இந்து நாகரீகத்துறைத் தலைவர் பேராசிரியர் வேதநாதன் கிறிஸ்தவ நாகரீகத்துறைத் தலைவர் பேராசிரியர் பிலேந்திரன் தமிழ்துறைத் தலைவர் பேராசிரியர் விசாகரூபன் உளவியல் ; துறைத் தலைவர் கலாநிதி கஜவிந்தன் நுண்கலைத்துறையின் இசைத்துறை தலைவர் பேராசிரியர் தர்ஷனன் மொழியியல்துறைத் தலைவர் விரிவுரையாளர் திருமதி சிவபாலன் ஆகியோர் இந்தக் குழவில் இடம் பெற்று இருந்தார்கள் .
இவர்கள் துரிதமாக இயங்கி உப குழு நியமிக்கப்பட்ட வெள்ளிக்கிழமையே உரிய மாணவர்களுடன நுண்கலைப் பீடத்தில் கலந்துரையாடி மாணவர்களுடைய பிரச்சனைகளை கேட்டறிந்ததுடன் மாணவர்களின் நியாயமான கோரிக்கைளையும் ஏற்று ஒரு தீர்வை எட்டியதன் அடிப்படையில் நாளை முதல் நடனத்துறை மாணவர்கள் வழமைபோன்று வுகுப்புகளுக்கு செல்லவுள்ளதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
யாழ், பல்கலைக்கழக நடனத்துறை மாணவர்கள் நடத்தி வந்த வகுப்பு பகிஸ்கரிப்பு சுமூகமான முறையில் தீர்க்கப்பட்டது
Reviewed by Author
on
November 03, 2013
Rating:

No comments:
Post a Comment