அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கஞ்சா வைத்திருந்த இருவர் கைது -படங்கள்

மன்னாரில் கஞ்சா வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 மன்னார் சவுத்பார் கடற்கரை பகுதியில் வைத்து கஞ்சா கடத்தப்படவுள்ளதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதியிற்கு நேற்று முற்பகல் சென்ற பொலிசாரால் 40 கிலேகிராம் கஞ்சா கைப்பற்;றப்பட்டுள்ளது.

மன்னார்  மாவட்ட பொலிஸ் அத்தியகட்சர் லக்சிறி விஜயசிங்க வின் பணிப்புரைக்கமைவாக மன்னார் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி துஸார தளுவத்தவின் வழிநடத்தலுடன் உதவி பொலிஸ் அத்தியகச்சகர் ஜ.பி.ரி. சுகதபால தலைமையிலான பொலிஸ் குழு  குறித்த கஞ்சாவை கைப்பற்றியதோடு அதனை வைத்திருந்த சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்

கஞ்சாவைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மன்னாரைசேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்றும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா இந்தியாவில் இருந்து கடல்மார்க்கமாக மன்னாருக்கு கொண்டு வரப்பட்டு வெளிமாவட்டத்திற்கு கெண்டு செல்லப்படவிருந்த நிலையிலேயே குறித்த கஞ்சா பொதியினை பொலிசார் மீட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் பெறமதி 80 லட்சம் ரூபா என பொலிசார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.





மன்னாரில் கஞ்சா வைத்திருந்த இருவர் கைது -படங்கள் Reviewed by Author on November 07, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.