உலக மீனவ தினத்தன்று மன்னார் மீனவர்கள் பணிபகிஸ்கரிப்பு :என்.எம்.ஆலம்
உலக மீனவர் தினமான நாளை வியாழக்கிழமை மன்னார் மாவட்ட மீனவர்கள் பல்வேறு போரிக்கைகளை  முன்வைத்து மன்னாரில் நாளை தொழில் பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுசங்கங்களின் சமாச தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள்இபாதிப்புக்கள்இதுயரங்கள் இது வரை எவராலும் கண்டு கொள்ளப்படாமை இ இதுவரை இப்பிரச்சினைகள் தீர்வுகாணப்படாமை இதனால் தங்கள் இயலாமையின் வெளிப்பாட்டையும் ஆதங்கத்தையும் இன்றைய உலக மீனவர் தினத்தை பகிஸ்கரிப்பதன் மூலம் உலகறியச் செய்ய தீர்மானித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் நாற்பதாயிரம் உறவுகளை கொண்ட ஒன்பதாயிரம் குடும்பங்கள் இக்கடலினூடாக மீன் பிடியின் மூலமான வாழ்வாதாரத்தை நம்பியவர்களாக உள்ளனர்.
 தன் உயிரை பணயம் வைத்து உலகுக்கு உணவளிக்கும் அம் மீனவர்களின் நியாயமான கோரிக்கைகள் தீர்வுகான முடியாததினால் இம் மீனவர்களுக்காக அனைவரும் சேர்ந்து தீர்வுகாண்பதுடன் அவர்களின் துயர் துடைக்க வழியமைப்போம்.
இந்த நிலையில் நாளை வியாழக்கிழமை மீனவர்கள் அனைவரும் இணைந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றையும் கையளிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உலக மீனவ தினத்தன்று மன்னார் மீனவர்கள் பணிபகிஸ்கரிப்பு :என்.எம்.ஆலம்
 Reviewed by Author
        on 
        
November 20, 2013
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
November 20, 2013
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
November 20, 2013
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
November 20, 2013
 
        Rating: 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment