அண்மைய செய்திகள்

recent
-

அதிரடி ஆட்டத்தின் மூலம் கொழும்பில் அபார வெற்றி பெற்றது மன்னார் பெரியகடை 'ஸ்டார் ஈகிள்'

மன்னார் பெரியகடை ஸ்டார் ஈகிள் அணியினர் கொழும்பு மூர்ஸ் கிரிக்கெட் அக்கடமி விளையாட்டு மைதானத்தில் மூன்று அணிகள் பங்குபற்றும் முக்கோணத்தொடர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக கடந்த 02-11-2013 சனிக்கிழமை கொழும்பிற்கு தமது பயணத்தினை மேற்கொண்டனர். இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் மன்னாரிலிருந்து ஒரு கழகம் கொழும்பிற்கு சென்று விளையாடியது இதுவே முதல் தடவையாகும் மட்டுமல்லாது TURF இல் விளையாடியதும் இதுவே முதல் தடவையாகும். இத் தொடரில் கொழும்பு முத்துவோல் கிரிக்கெட் அக்கடமி, மன்னார் ஸ்டார் ஈகிள் கிரிக்கெட் அணி, புகழ்பெற்ற கொழும்பு மோர்ஸ் கிரிக்கெட் அக்கடமி ஆகிய அணிகள் மோதின.

இதன் முதலாவது போட்டியில் (03-11-2013)கொழும்பு முத்துவோல் கிரிக்கெட் அக்கடமியும் மன்னார் பெரியகடை ஸ்டார் ஈகிள் அணியும் மோதின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற முத்துவோல் கிரிக்கெட் அக்கடமி அணியினர் ஸ்டார் ஈகிள் அணியினரை துடுப்பெடுத்தாடும்படி பணித்தனர். இதன்படி முதலில் தமது துடுப்பாட்டத்தினை மேற்கொண்ட ஸ்டார் ஈகிள் அணியினர் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான றோயின் அதிரடியான ஆறு ஓட்டத்துடன் தமது ஓட்டங்களை குவித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களில் 05 இலக்குகளை இழந்து 138 ஓட்டங்களை குவித்தனர். துடுப்பாட்டம் சார்பாக றோய் 76 ஓட்டங்களையும், அஜந்தன் 30 ஓட்டங்களையும் அதிக ஓட்டங்களாக பெற்றனர். பந்து வீச்சில் களும் 04 ஓவர்கள் பந்து வீசி 05 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு முத்துவோல் கிரிக்கெட் அக்கடமி அணியினர் 15 ஓவர்களில் 08 விக்கெட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 23 ஓட்டங்களால் தோல்வியடைந்தனர். துடுப்பாட்டத்தில் ருவி 20 ஓட்டங்களையும், நிரோசன் 18 ஓட்டங்களையும், கிசோர் 15 ஓட்டங்களையும், கவிதாஸ் 12 ஓட்டங்களையும் அதிக ஓட்டங்களாக பெற்றனர். பந்து வீச்சில் ஸ்டார் ஈகிள் அணி சார்பாக அமல் 04 ஓவர்கள் பந்துவீசி 03 விக்கெட்டுக்களையும், அகிலன் 03 ஓவர்கள் பந்துவீசி 02 விக்கெட்டுக்களையும், ஜக்சன் 03 ஓவர்கள் பந்துவீசி 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.

அதிரடி ஆட்டத்தின் மூலம் கொழும்பில் அபார வெற்றி பெற்றது மன்னார் பெரியகடை 'ஸ்டார் ஈகிள்' Reviewed by NEWMANNAR on November 06, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.