அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்ட சர்வதேசத்தின் தலையீடு அவசியம்!- அகாஷியிடம் சம்பந்தன் தெரிவிப்பு

தமிழ் மக்­களின் உரி­மை­களை வென்­றெ­டுத்து வடக்கில் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்ட வேண்­டு­மானால் சர்வதேசத்தின் தலை­யீ­டுகள் அவ­சியம். வடக்கில் ஜன­நா­யகத்திற்­காக அர­சியல் ரீதி­யி­லான தீர்வு ஒன்­றி­னையே எதிர்­பார்க்­கின்றோம் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார்.

மேலும் வடக்கில் உள்ள இரா­ணு­வத்­தி­னரை உட­ன­டி­யாக வெளி­யேற்றி தமிழ் மக்­களின் பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்தும் வரை அர­சாங்­கத்­திற்கு சகல விதத்­திலும் அழுத்­தங்­களை கொடுப்போம் எனவும் அவர் தெரி­வித்தார்.

இலங்­கைக்­கான ஜப்­பா­னிய விசேட தூதுவர் யசூஷி அகாஷி உட­னான உத்­தி­யோ­க­பூர்வ சந்­திப்­பொன்­றினை நேற்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பினர் மேற்­கொண்­டி­ருந்­தனர். சுமார் 3 மணித்­தி­யா­லத்­திற்கு அதி­க­மாக இரு­த­ரப்­பி­னரும் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தனர்.

இதன் பின்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் ஊட­கங்­க­ளுக்கு கருத்­துத்­ தெ­ரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,

வடக்கு வாழ் தமி­ழர்கள் தமது வாழ்வில் ஜன­நா­யகத் தினையும் சுதந்­தி­ரத்­தி­னையும் தொலைத்து நீண்­ட­காலம் ஆகி­விட்­டது. இதனை வென்­றெ­டுக்க வேண்­டிய கடப்­பாட்டில் நாம் போரா­டி­ வ­ரு­கின்றோம். தமி­ழர்­களின் நிலை என்­ன­வென்­பதை கடந்த வட­மா­காண சபை தேர்தல் மூலம் முழு உல­கமும் அறி­ந்துவிட்­டது. இப்­போது வடக்கு மக்­களும் இநாமும் எவற்றை எதிர்­பார்க்­கின்றோம், எதற்­காக போரா­டு­கின்றோம் என்­ப­தையும் அனை­வரும் அறிந்­து­விட்டனர்.

எனவே, தமிழ் மக்­களின் பாது­காப்­பி­னையும் அவர்­க­ளுக்­கான ஜன­நா­ய­கத்­தையும் பெற்­றுக்­கொள்ள வேண்­டு­மானால் சர்­வ­தே­சத்தின் தலை­யீ­டுகள் கட்­டா­ய­மாக தேவைப்­ப­டு­கின்­றன. சர்­வ­தேசத் தலை­யீட்டால் மாத்­தி­ரமே வடக்­கிற்கு நிரந்­த­ர­மா­ன­தொரு தீர்­வினை பெற்­றுக்­கொள்ள முடியும்.

மேலும் வடக்கில் குவிக்­கப்­பட்­டுள்ள இரா­ணுவ படை­யி­னரை உட­ன­டி­யாக வெளி­யேற்ற வேண்­டு­மென்­பதே எமது முக்­கிய கோரிக்கை. நாம் பல­த­ட­வைகள் இது தொடர்­பாக அர­சாங்­கத்­திடம் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தியும் அர­சாங்கம் செவி­ம­டுக்­காது தான் தோன்றித் தன­மா­கவே செயற்­பட்டு வரு­கின்­றது.

யுத்தம் முடி­வ­டைந்து நான்கு ஆண்­டு­களை கடக்­கின்ற நிலையில் இன்­னமும் தமி­ழர்­களை அடக்கி யுத்த பயத்­தினை தமி­ழர்கள் மனதில் நீங்­காது வைத்­தி­ருக்கும் செயற்­பாட்­டி­லேயே வட­மா­காண ஆளு­நரும் அர­சாங்­கமும் செயற்­ப­டு­கின்­றன என்­பது தெட்­டத்­தெ­ளி­வாக தெரி­கின்­றது.

ஆகவே, இனிமேலாவது எமது தமிழ் மக்­களை சுதந்­தி­ர­மாக செயற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளித்து அவர்­க­ளுக்­கான வாய்ப்­புகள் வழங்க வேண்டும். நாம் தீவி­ர­வாத செயற்­பா­டு­க­ளி­லேயோ அல்­லது மீண்­டு­மொரு யுத்­தத்­தினை எதிர்­பார்த்தோ அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களை கொடுக்­க­வில்லை. நாம் எப்­போதும் அர­சியல் ரீதி­யான தீர்வு ஒன்­றி­னையே எதிர்­பார்க்­கின்றோம்.

எனவே, இலங்­கைக்­கான ஜப்­பா­னிய விசேட தூதுவர் யசூஷி அகாஷியுட­னான இந்த நீண்­ட­நேர சந்­திப்பில் சிறு­பான்மை மக்­களின் நிலை­பற்­றியும் வடக்கின் இன்­றைய தேவை­பற்­றியும் பல விட­யங்­களை கலந்­து­ரை­யாடி உள்ளோம். எமது நிலைப்­பாட்டில் நாம் உறுதியாகவுள்ளோம் என்பதை அவரிடம் தெரிவித்துள்ளோம்.

ஆகவே, எமது தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியிலான நல்லதொரு தீர்வினை பெற்றுக் கொடுத்து வடமாகாணத்தை இராணுவ தலையீடுகள் இன்றி மாகாண சபைகள் ஊடாக இயங்கவைக்க வேண்டிய அனைத்து அதிகார த்தையும் அரசு தலையீடுகளின்றி வழங்க வேண்டும் எனவும், தெரிவித்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.
வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்ட சர்வதேசத்தின் தலையீடு அவசியம்!- அகாஷியிடம் சம்பந்தன் தெரிவிப்பு Reviewed by NEWMANNAR on December 11, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.