மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் விசாரணை
மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு இந்த விசாரணை நடைபெற்றுள்ளது.
தன்னை சுமார் 3 மணித்தியாலங்கள் அதிகாரிகள் விசாரணை செய்ததாக லெம்பேட் தெரிவித்தார்.
மன்னாரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஒரு செய்தி தொடர்பாகவே அதிகாரிகள் தன்னை விசாரணை செய்ததாகவும், அந்தச் செய்திக்கும் தனக்கும் தொடர்பு இல்லையென்று விசாரணையின்போது தான் தெரிவித்ததாகவும் லெம்பேட் கூறினார்.
இது தொடர்பில் தன்னிடமிருந்து வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தேவைப்படும்போது அழைத்தால் மீண்டும் விசாரணைக்காக வரவேண்டும் என தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் விசாரணை
Reviewed by NEWMANNAR
on
December 11, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 11, 2013
Rating:


No comments:
Post a Comment