அண்மைய செய்திகள்

recent
-

சுற்றுலா விசாவில் வந்து பாதுகாப்புப் படையினர் நிலைகொண்டுள்ள இடங்களை படம் பிடித்ததற்காக இந்தியர் ஒருவர் கைது


கிளிநொச்சிப் பகுதியில் வைத்து செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


சுற்றுலா விசாவில் வந்த ஒருவர் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடன் இடங்களை புகைப்படம் எடுத்த காரணத்தாலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டங்களை அந்த நபர் மீறினார் என்றும், மேலதிக நடவடிக்கைக்காக அவரை குடிவரவு அதிகாரிகளிடம் காவல்துறையினர் ஒப்படைப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும், 24 வயதான அவர் தன்னை ஒரு ஊடகவியலாளர் என்று தெரிவிக்கவில்லை என்றும் பொலிஸ் திணைக்கள பேச்சாளர், சுற்றுலா விசாவில் வருபவர்கள் இவ்வகையான நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்றும் சுட்டிகாட்டினார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அந்த நபருடன் பயணித்தார் என்றும், அவர்கள் ஏன் வட மாகாணத்தில் அதிமுக்கியமான பாதுகாப்பு தொடர்பான இடங்களை படம் எடுக்க வேண்டியத் தேவை ஏற்பட்டது என்றும் அஜித் ரோஹன கேள்வி எழுப்பினார் .

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்  தெரிவித்திருப்பதாவது, கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் தனது நண்பர் என்றும், வட மாகாண சபையின் உறுப்பினர் பசுபதி பிள்ளை, பிரதேச சபை உறுப்பினர் தயாபரன் உட்பட தமது குழுவினருடன் வேரவில், வலைப்பாடு, கிராஞ்சி, ஜெயபுரம் போன்ற பகுதிகளுக்கு தான் பயணித்தபோது, அவரும் உடன்வந்தார் என்பதையும் உறுதிப்படுத்தினார்.

அந்தப் பகுதியிலுள்ள மக்களைச் சந்திப்பதற்காகவும், அவர்களுடன் சில விஷயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவும் தாம் சென்றிருந்த்தாக சிறீதரன் தெரிவித்தார்.

எனினும்,இராணுவ முகாம்கள் இருக்கும் பகுதிகளுக்கு தாங்கள் செல்லவில்லை என்றும் அவர் கூறினார். 

கைது செய்யப்பட்டுள்ள தனது நண்பர் இதற்கு முன்பும் ஒரு முறை இலங்கைக்கு வந்து சென்றுள்ளார் எனவும் சிறீதரன் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா விசாவில் வந்து பாதுகாப்புப் படையினர் நிலைகொண்டுள்ள இடங்களை படம் பிடித்ததற்காக இந்தியர் ஒருவர் கைது Reviewed by Admin on December 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.