சுனாமிப் பேரலையில் உயிரிழந்த உறவுகளை துயரத்துடன் நினைவுகூரும் மக்கள்
சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான உறவுகளை இன்று இலங்கைவாழ் மக்கள் பெரும் துயரத்துடன் நினைவுகூருகின்றனர். வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் கரையோரப் பகுதிகளில் இந்த நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 9 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தில் இலங்கையில் மட்டும் 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் பெரும் சொத்தழிவுகளும் ஏற்பட்டிருந்தன.
இந்த அனர்த்தத்தில் உயிர் துறந்த தமது உறவுகளை நினைவுகூர்ந்து இன்றைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
சுனாமி அனர்த்தத்தில் பலியானவர்களை நினைவுகூர்ந்து அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிகள் மற்றும் கல்லறைகளில் மக்கள் இன்று அஞ்சலி செலுத்தவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுனாமிப் பேரலையில் உயிரிழந்த உறவுகளை துயரத்துடன் நினைவுகூரும் மக்கள்
Reviewed by Admin
on
December 26, 2013
Rating:

No comments:
Post a Comment