வட மாகாணசபையின் முதலாவது வரவு செலவுத்திட்டம் நாளை சமர்ப்பிப்பு
வடக்கு மாகாணசபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம், நாளை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
2014ம் ஆண்டுக்கான வட மாகாணசபையின் வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம், 19,481 மில்லியன் ரூபா நிதி வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை வடமாகாணசபையின் கீழ் உள்ள ஆளணியினருக்கான ஊதியம் மற்றும் ஏனைய செலவுகளுக்கும், மாகாண அமைச்சுக்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள திணைக்களங்களின் செலவுகளுக்கும், ஏனைய வேலைத்திட்டங்களுக்கும் ஒதுக்குவது குறித்த விபரங்கள் இந்த வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
வட மாகாணசபையின் முதலாவது வரவு செலவுத்திட்டம் நாளை சமர்ப்பிப்பு
Reviewed by NEWMANNAR
on
December 09, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 09, 2013
Rating:


No comments:
Post a Comment