ஏழு வருடங்கள் தொடர்ந்து கடமையாற்றிய அதிபர், ஆசிரியர்களுக்கு இடமாற்றங்கள்.
வடக்கு மாகாணத்தில் ஒரே பாடசாலையில் தொடர்ச்சியாக ஏழு வருடங்கள் கடமையாற்றிய
அதிபர்கள் , ஆசிரியர்களுக்கு அடுத்த வருடம் முதலாம் தவணையில் இருந்து இடமாற்றங்கள் வழங்கப்படவுள் ளன .
தொடர்ச்சியாக ஏழு வருடங்கள் அதற்கு மேல் ஒரே பாடசாலையில் பணியாற்றிய அதிபர்கள் , ஆசிரியர்கள் கல்விக் கோட்டம் மற்றும் கல்வி வலய மட்டத்தில் உள்வாரியாக இடமாற்றம் செய்யப்படவுள்ளனர் .
இதற்கான ஏற்பாடுகள் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் பணிப்புக்கு அமைய வலயக் கல்வி அலுவலகங்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
தொடர்ச்சியாக ஒரே பாடசாலையில் கடமையாற்றிய அதிபர்கள் , ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் முதலாம் தவணையில் நடைமுறைக்கு வரும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளன .
தொடர்ச்சியாக நீண்டகாலம் ஒரே பாடசாலையில் கடமை புரிவதால் ஏற்படக்கூடிய இயல்புகள் ஏனைய பாடசாலைகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
ஆசிரியர்கள் , அதிபர்கள் பாடசாலை ரீதியிலான சேவை விபரங்கள் மற்றும் தகவல்கள் என்பன வலயக் கல்வி அலுவலகங்களில் கணினி மயப்படுத்தப்பட்டு நிரல் படுத்தப்பட்டிருப்பதால் உரிய தகவல்களின் அடிப்படையில் இடமாற்ற நடைமுறைகளின் பிரகாரம் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர் என வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது .
ஏழு வருடங்கள் தொடர்ந்து கடமையாற்றிய அதிபர், ஆசிரியர்களுக்கு இடமாற்றங்கள்.
Reviewed by Admin
on
December 18, 2013
Rating:
Reviewed by Admin
on
December 18, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment