மன்னார் நகரில் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிட நிலையத்தில் உள்ள நேரக்கணிப்பாளர் கூடு சேதம்
மன்னார் நகரில் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிட நிலையத்தில் உள்ள நேரக்கணிப்பாளர் கூடு அடித்து உடைக்கப்பட்டிருக்கின்றது.
இச்சம்பவம் செவ்வாயக்கிழமை இடம் பெற்றிருக்கின்றது .
மன்னாரில் பண்டிகைக்கால வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வியாபார நடவடிக்கைகளுக்கு பல வர்த்தகர்கள் மன்னாருக்கு வருகை தந்திருக்கின்றனர்.
இந்நிலையில் தெருக்கடைகளுக்கான இடங்களை பேரம் பேசும் நடவடிக்கைகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே ஒரு சிலர் முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் அமைந்துள்ள நேரக்கணிப்பாளர் கூட்டினை சேதப்படுத்தியிருக்கின்றனர் என தெரிய வருகின்றது.
மன்னார் நகரில் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிட நிலையத்தில் உள்ள நேரக்கணிப்பாளர் கூடு சேதம்
Reviewed by Admin
on
December 19, 2013
Rating:
Reviewed by Admin
on
December 19, 2013
Rating:


No comments:
Post a Comment