சைவ உணவுப் பொருட்களுக்கு புதிய தரச் சான்றிதழ்
சைவ உணவுப் பொருட்களுக்கான புதிய தரச் சான்றிதழ் ஒன்றை இலங்கை தரநிர்ணய சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
எஸ்.எல்.எஸ்.- 1460 என்ற இந்த புதிய சான்றிதழ் சைவ உணவுப் பொருட்கள், உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகள் போன்றவற்றிற்காக விநியோகிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த இலட்சினையை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், அதற்குரிய நிபந்தனைகளை குறிப்பிட்ட நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என இலங்கை தரநிர்ணய சபை சுட்டிக்காட்டியுள்ளது.
சைவ உணவுப் பொருட்களுக்கு புதிய தரச் சான்றிதழ்
Reviewed by Admin
on
December 13, 2013
Rating:
Reviewed by Admin
on
December 13, 2013
Rating:


No comments:
Post a Comment