மருந்து வகைகளுக்கான நிர்ணய விலைகளை அறிவிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு
மருந்து வகைகளுக்கான நிர்ணய விலைகளை அறிவிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை அடுத்த வருடத்தின் முதலாவது காலாண்டில் அமுல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடத்திற்கான வரவு- செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவம் ஆகிய அமைச்சுக்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது சுகாதார அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்த அமைச்சுக்களுக்கான குழுநிலை விவாத்தை ஆரம்பித்து உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ, 2006 ஆம் ஆண்டு முதல் சுகாதார துறைக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, முன் அனுமதியின்றி பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் இன்று முதல் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் சபாநாயகர் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் போக்குவரத்து அமைச்சுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதம் பாராளுமன்றத்தில் இன்று முற்ககல் நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மருந்து வகைகளுக்கான நிர்ணய விலைகளை அறிவிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு
Reviewed by Admin
on
December 14, 2013
Rating:
Reviewed by Admin
on
December 14, 2013
Rating:


No comments:
Post a Comment