முசலி பிரதேசசெயலக கலாசார பிரிவால் 'நித்திலம்' எனும் மலர் வெளியீடு இடம் பெறவுள்ளது.
முசலி பிரதேச செயலக கலாசாரப் பிரிவினால் முதன் முதலாக சஞ்சிகை வெளியிடப்பட உள்ளது. நாட்டின் பல பகுதிகளும் உள்ள பிரதேச செயலகங்களிலும் இவ்வாறான சஞ்சிகைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளன.
இச்சஞ்சிகைகளில் பிரதேச முதுசங்கள்,கவிஞர்கள்,எழுத்தாளர்கள் ,பாரம்பரிய கலைகள் ,நாட்டாரியல் ,கலை பண்பாட்டு அம்சங்கள் என்பன வெளிக் கொண்டு வரப்படுகின்றன.
இம்முயற்சி மாணவர்கள் ,ஆய்வாளர்கள் ,எதிர்கால சந்ததிகள் போன்றோர்களுக்கான ஒருசிறந்த வழிகாட்டியாக அமையும்.
முசலிப் பிரதேச செயலகக்கலாசார உத்தியோகத்;தர் கே.என்.எப்.நஸ்ருதீன் அவர்கள்,முசலிப்பிரதேச செயலாளர். கேதீஸ்வரன் அவர்களின் ஆலோசனைப் படி சிறப்பான முறையில் புத்தக வெளியீட்டுக்கான முயற்சியில் ஈடுபடுவதைக்காண முடிகின்றது.
இம்மலர் வெளியீட்டிற்கு முசலிப்பிரதேச மக்களும்,புத்திஜீவிகளும் ,முசலிப் பிரதேச சபைத்தலைவரும் ,அதிபர்,ஆசிரியர்களும் பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.
நித்திலம் என்றால் முத்து என்று பொருள்படும் முத்துக் குளித்தலில் முசலிப்பிரதேசம் வரலாற்று பிரசித்தம் பொருந்தியதாகும்.எகிப்திய பேரழகி கிளியோ பட்ரா அணிந்த முத்து இப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டவையாகும்.ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆயிரக்கணக்கான ஸ்ரேலிங் பௌன்களை இப்பிரதேச முத்துக்குளித்தல் மூலம் வருமானமாகப் பெற்றுக் கொண்டனர்.
கே.சி.எம்.அஸ்ஹர்
முசலி பிரதேசசெயலக கலாசார பிரிவால் 'நித்திலம்' எனும் மலர் வெளியீடு இடம் பெறவுள்ளது.
Reviewed by Admin
on
December 14, 2013
Rating:
Reviewed by Admin
on
December 14, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment