ஜனவரி முதல் மீனவர்கள் உயிர்க்காப்பு அங்கிகள் அணிவது கட்டாயம். கடற்றொழில் அமைச்சர் அறிவித்தல்.
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் மீனவர்கள் அனைவரும் உயிர்க்காப்பு அங்கிகள்
அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது .
மீனவர்களின் உயிர்களைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும் .
மீனவர்கள் இயற்கை அனர்த்தங்களாலும் ஏனைய நேரங்களில் கடலில் அடித்துச் செல்லப்பட்டும் இறக்கின்றனர் .
இதற்கிணங்க இவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே உயிர்க்காப்பு அங்கி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது .
மேலும் , முதலாளிமார்கள் தங்களது படகுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது .
எதிர்காலங்களில் கடற்றொழில்களில் ஈடுபடும் படகுகளில் தேவையான உயிர்காப்பு அங்கிகள் இல்லாதவிடத்து குறித்த படகின் அனுமதியும் இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார் .
ஜனவரி முதல் மீனவர்கள் உயிர்க்காப்பு அங்கிகள் அணிவது கட்டாயம். கடற்றொழில் அமைச்சர் அறிவித்தல்.
Reviewed by NEWMANNAR
on
December 11, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 11, 2013
Rating:


No comments:
Post a Comment