புத்தளம் சாஹிரா தேசிய கல்லுாரியின் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஏ.ஓ.எம்.நஜீபின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு .
இன்று அதிகாலை வேளை கற்கலால் வீட்டின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் வீட்டின் கண்ணாடிகள் சேதமாகியுள்ளன .
புத்தளம் சாஹிரா தேசிய கலலுாரியின் புதிய அதிபராக மௌலவி எஸ்ஏ.சீ.யாகூப் கல்வி அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்கவினால் நியமனம் செய்யப்பட்டு பல நாட்கள் கழிந்த நிலையிலும் அரசியல் பின்புலம் காரணமாக தற்போதை தரம் 2 இன் பதில் அதிபராக இருந்துவரும் எம்.எச்.எம்..றாசிக் அதனை புதிய அதிபரிடம் கையளிக்கமால் இருப்பது தொடர்பில் புத்தளம் சாஹிரா தேசிய கல்லுாரியின் அபிவிருத்தி சங்க செயலாளர் தலைமையிலான குழுவினர் கல்வி அமைச்சின் செயலாளரை சந்தித்து இது தொடர்பில் விளக்கமளித்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை புதிய அதிபரிடம் கடமைகளை கையளிக்குமாறு கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தற்போதைய அதிபர் றாசிக்குக்கு அறிவித்திருந்தார.வியாழக்கிமை பிற்பகல் 2.00 மணிக்கு அதனை ஒப்படைப்பதாக தெரிவித்திருந்த போதும்,அவர் அங்கு சமூகமளிக்கமால் இருந்துள்ளார்.
இது தொடர்பில் மீண்டும் பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரை சந்தித்து நிலைமையினை விளக்கியுள்ளார்.
இந்த நிலையில் புத்தளம் மன்னார் வீதியில் 7 வது ஒழுங்கையில் அமைந்துள்ள அபிவிருத்தி குழுவின் செயலாளர் ஏ.ஓ.எம்.நஜீபின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தி ஜீவிகளும்,அமைப்புக்களும் தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் சாஹிரா தேசிய கல்லுாரியின் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஏ.ஓ.எம்.நஜீபின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு .
Reviewed by Admin
on
December 14, 2013
Rating:
Reviewed by Admin
on
December 14, 2013
Rating:








No comments:
Post a Comment