ஆலங்குடா மக்களுக்கு குழாய் கிணறுகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன
வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த நிலையில் ஆலங்குடாவில் வசித்துவரும் மக்களின் குடிநீர் பிரச்சினையினை தீர்த்து வைக்கும் வகையில் குழாய் கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு்ள்ளன.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,வடமாகாண சபை உறுப்பினர் ஜனுாபர் உள்ளிட்ட பலரும் இந்த திறப்பு விழா நிகழ்வின் போது கலந்து கொண்டனர்.
தேர்தல் காலங்களில் இம்மக்களிடம் வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றியுள்ளதாகவும்,இன்று 385 குடும்பங்களுக்கு இந்த நீர் வசதி செய்து கொடுக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் கூறினார்.
நமது கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் சகலருக்கும் சென்றடைவதாகவும் இங்கு கருத்துரைக்கும் போது அவர் மேலும் கூறினார்.
ஆலங்குடா மக்களுக்கு குழாய் கிணறுகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன
Reviewed by Admin
on
December 26, 2013
Rating:
No comments:
Post a Comment