அண்மைய செய்திகள்

recent
-

இறைமகன் தொழுவத்திலே பிறக்காது எம் இல்லத்திலே பிறக்க அன்பு செலுத்தும் உள்ளமாக நாம் மாற வேண்டும் மன்னார்: ஆயர் யோசேப்பு ஆண்டகை

உலக மனித நேயம்; தகுதியற்றதாக இருந்ததினதால்தான் இறைமகன் யேசு இல்லத்திலே பிறக்காது மாட்டுத்தொழுவத்திலே பிறக்க நேரிட்டது. ஆகவே ஒவ்வொரு உள்ளங்களும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு; அன்பில் நிலைக்குமாகில் அங்கு இறைமகன் யேசு பிறப்பார் குடிகொள்வார் என
மன்னார் மறைமாவட்ட பேராலயமான புனித செபஸ்தியார் ஆலயத்தில் இடம்பெற்ற நல்லிரவு நத்தார் விழா திருப்பலியின்போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை தனது மறையுரையில் இவ்வாறு தெரிவத்தார்.

        அவர் தனது மறையுரையில் தொடர்ந்து கூறுகையில் இவ் புனிதமான நிகழ்விலே சமாதணம் என்ற வடிவினிலே நம் மத்தியில் கிறிஸ்து பிறந்துள்ளார். நம் நாட்டிற்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நம் பங்கு மக்களுக்கும் வட மாகாண மக்கள் அனைவருக்கும் உண்மையான  அர்த்தமுள்ள ஆழமான சமாதானம் கிடைக்க வேண்டும் இந்த நாடு சமாதானம் நிறைந்த கூட்டாக அமைகின்ற அதிகாரத்தை கொண்டு வழிநடத்துகின்ற ஆட்சியாக அமைய வேண்டும் என இத் திருப்பலியில் வேண்டுவோம் என ஆரம்பித்து
                 நாம் கிறிஸ்து விழாவை கொண்டாடுகின்றபோது மூன்று விடயங்களை நினைவு கூருகின்றோம் ஒன்று திருவிழிப்பு திருப்பலி நடுச்சாம திருப்பலி அடுத்து காலையில் ஒப்புக்கொடுக்கும் திருப்பலியாகும்.
 இதற்கு அர்த்தம் உண்டு அதாவது கடவுளாகிய திருமகன் கிறஸ்து மனிதனாக இவ்வுலகில் பிறந்ததை நினைவு கூறுவதுதான் முதல் திருப்பலி அடுத்து இந்த உலகத்திலே அவர் மனிதனாக பிறந்து நாம் நல் வாழ்வு வாழவேண்டும் என்பதை நினைவு கூறவே நல்விரவு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகின்றது. காலையில் ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலியானது ஒவ்வொருவரினதும் உள்ளத்திலும் இறைவன் பிறக்கின்றார் என்ற உண்மையை வெளிப்படுத்தவே காலை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகின்றது
              ஆகவே இந்த விழாவின் அர்த்தம் கிறிஸ்து கடவுளின் சாயலாக எம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் வந்துகொண்டு இருக்கின்றார் ஆகவே நாம் எமது உள்ளங்களை திறந்து கொடுக்கவேண்டும் இறையேசு நம் உள்ளத்தில் பிறக்க வேண்டும் என்பதற்காகவே நாம் இந்த கிறிஸ்து பிறப்பு விழiவை கொண்டாடுகின்றோம்
             பரிசுத்த வேதாகமம் கிறிஸ்து பிறப்பு விழாவைப்பற்றி கூறும்பொழுது நாம் வாழும்பொருட்டு கடவுள் தன் ஒNரு மகனை இவ்வுலகிற்கு அணுப்பினார் இதன் மூலம் கடவுளின் அன்பு எமக்கு வெளிப்படுத்தப்படகின்றது. இதன்மூலம் நாம் கடவுளை அன்பு கொள்கின்றோம் என்றல்ல கடவுள் எம்மில் அக்கறை கொண்டுள்ளார் என்பதாகும்.
          கடவுள் இவ்வாறு நம்மில் அன்பு கொண்டுள்ளார் என்றால் நாமும் ஒருவர் ஒருவருக்கு அன்பு செலுத்த வேண்டும் ஆகவே கிறிஸ்து பிறப்பு விழா இதை எமக்கு உணர்த்த வேண்டும்.
அத்துடன் இதை நாம் வாழ்வாக்கிக்கொள்ள வேண்டும். இதற்கு எம் உள்ளங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைய வேண்டும். அப்பொழுதுதான் இறைவன் எம்மில் பிறப்பார்.

எனவே கிறிஸ்து பிறப்பு விழா கடவுள் நம்மீது கொண்ட அன்பை உனர்ந்து கொள்ளவும். ஒருவர் மற்றவர் மீது திருட்சபையின் அன்பை வாழ்வாக்கவும் எம்மவருக்கு கொடுக்கப்படுகின்ற சவாலாக ஒரு அழைப்பாக அமைகின்றது. எனவே நாம் கிறிஸ்துவை சந்திக்கபோகும்போது எம் மனங்கள் எல்லோரோடும் இணைந்திருக்கவேண்டும்.

இந்த கொண்டாட்டம் கடவுள் நம் உள்ளங்களிலேவும் இல்லங்களிலேயும் பிறக்கிற கொண்டாட்டமாகும். கடவுள் இங்கு வந்து பிறக்க எல்லாம் இந்த உலகம் தகுதியற்றதாக இருந்ததால்தான் அவர் மாட்டுத்தொழுவத்தை தேர்ந்தெடுத்தார். இதே போன்றுதான் நம் உள்ளங்களும் தூய்மையற்றதாக இருந்தால் அவர் வந்து பிறக்கமாட்டார்.
எவ்வளவுக்கு அன்பு மனித நேயம் எம் உள்ளத்தில் உள்ளதோ அவ்வவவுக்கு கடவுள் எம் உள்ளத்தில் குடிகொள்வார். கடவுள் தம் சாயலாகவும் பாவனையாகவும் படைக்கப்பட்ட மனிதனுக்கு தம் மாட்சியையும் மகிமையையும் முடியாக சூட்டினார் என்று திருவிவிலியம் கூறுகின்றது.
ஆகவே மனித மான்பை நாம் நம் குடும்பங்களிலே பேணுவோம். அவரால் படைக்கப்பட்ட நாம் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் அவ்வாறுதான் கடவுள் நம்மை பார்க்கின்றார். ஏன தெரிவித்தார்.



இறைமகன் தொழுவத்திலே பிறக்காது எம் இல்லத்திலே பிறக்க அன்பு செலுத்தும் உள்ளமாக நாம் மாற வேண்டும் மன்னார்: ஆயர் யோசேப்பு ஆண்டகை Reviewed by Author on December 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.