சுனாமி பேரலையின் 9ம் ஆண்டு நினைவுதினம் மன்னாரில் -படங்கள்
சுனாமி பேரலையினால் இறந்த உறவுகளை நினைவு கூறும் நிகழ்வு மன்னார் திருமறைகலாமன்றத்தின் அலுவலகத்தில் இன்று காலை நினைவுகூறப்பட்டது.
சுனாமி பேரலையின் 9ம் ஆண்டு நினைவுதினத்தை ஒட்டி குறித்த நிகழ்வு இன்று மன்னார் திருமறைகலாமன்றத்தினால்; ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வு மன்னார் திருமறைகலாமன்றத்தின் மாவட்ட தலைவர் திரு.மோகன் தலைமையில் நடைபெற்றது.
இன்நிகழ்வில் சுனாமி பேரலையினால் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் போது குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட வட மாகாண போக்குவரத்து மற்றும் கடற்றொழில் அமைச்சர் தீபசுடரினை ஏற்றிவைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இதன்பின் பிரமுகர்களின் உரை நடைபெற்றது. குறித்த நிகழ்வில் அரச அதிகாரிகள்,அரசியல் பிரமுகர்கள்,அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்
சுனாமி பேரலையின் 9ம் ஆண்டு நினைவுதினம் மன்னாரில் -படங்கள்
Reviewed by Author
on
December 26, 2013
Rating:
No comments:
Post a Comment