மன்னாரில் பண்டிகைக்கால வியாபாரங்களை மேற்கொள்ள மன்னார் நகர சபை இடம் ஒதுக்கீடு.
எதிர் வரும் பண்டிகைக்காலங்களை முன்னிட்டு மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் இது வரை 137 தற்காலிக வியாபார நிலையங்கள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.....
எதிர் வரும் நத்தார் புதுவருட பண்டிகைக்காலங்களை முன்னிட்டு தற்காலிக வியாபார நிலையங்கள் அமைக்க மன்னார் நகர சபை இடங்களை ஒதுக்கீடு செய்து வருகின்றது.
இந்த வியாபார நிலையங்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மட்டுமே இயங்க முடியும்.
இந்த நிலையில் மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதி தொடக்கம் மன்னார் பிரதேச செயலகம் வரை குறித்த வியாபார நிலையங்கள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது.
இது வரை 137 வியாபார நிலையங்கள் அமைப்பதற்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு வியாபாரநிலையம் அமைப்பதற்கு நில வாடகையாக 12 ஆயிரம் ரூபாய் அறவீடு செய்யப்படுகின்றது.
சிறு நிலப்பரப்பைக் கொண்ட கடைகளுக்கு இடங்களுக்கு ஏற்ப வாடகை அறவீடு செய்யப்படுகின்றது.
இது வரை பண்டிகைக்கால வியாபார நிலையங்களை அமைக்க நில வாடகையாக 137 வியாபார நிலையங்களின் உரிமையாளர்களிடம் இருந்தும் மொத்தமாக 15 இலட்சம் ரூபாய் அறவீடு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் 20 வியாபார நிலையங்கள் அமைக்க இடங்கள் வழங்கப்படவுள்ளது.குறித்த பணத்தினை மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தினை அபிவிருத்தி செய்வதற்கு மன்னார் நகர சபை தீர்மானித்ததுள்ளது.
மன்னார் நகர சபையின் தலைவர்இஉப தலைவர்இநகர சபை செயலாளர்இஉறுப்பினர்களின் ஆதரவோடு குறித்த வேளைத்திட்டம் இடம் பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Reviewed by Author
on
December 17, 2013
Rating:
Reviewed by Author
on
December 17, 2013
Rating:

No comments:
Post a Comment