அண்மைய செய்திகள்

recent
-

பல்கலைக்கழக வாய்ப்பு கிடைத்தோருக்கான முக்கிய அறிவிப்பு

புதிய கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி கையேடு நாளை (27) நள்ளிரவு வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 176,527 மாணவர்கள் (62.64%) பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் தகைமையைப் பெற்றுள்ளனர். 

மார்ச் 31 ஆம் திகதி நள்ளிரவு வெளியான இம்முறை உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 281,810 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். 

111 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 

2025 ஆம் ஆண்டில் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 30,000-க்கும் அதிகமானோர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர். 

பாடசாலை மட்டத்தில் 7,477 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் 'A' சித்தியைப் பெற்றுள்ளனர் (3.38%). 

தனியார் பரீட்சார்த்திகளில் 823 பேர் அனைத்துப் பாடங்களிலும் 'A' சித்தியைப் பெற்றுள்ளனர். 

பல்கலைக்கழக அனுமதி குறித்த மேலதிக விபரங்களை மாணவர்கள் நாளை நள்ளிரவு முதல் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் ஊடாக அறிந்துகொள்ள முடியும்.




பல்கலைக்கழக வாய்ப்பு கிடைத்தோருக்கான முக்கிய அறிவிப்பு Reviewed by Vijithan on April 26, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.