அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஆயர் தொடர்பான கருத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு கண்டனம்.

தமிழ் மக்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வரும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜேசுப்பு ஆண்டகை அவர்களுக்கு அரசாங்கம் அண்மைக்காலமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் என பெயர் சூட்டி வந்துள்ள நிலையில் தற்போது ஆயர் அவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆலோசகராக செயற்பட்டு வருவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க
தெரிவித்த கருத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வண்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,,,,

வடக்கில் உள்ள தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களுக்கு தீர்வு காண மன்னார் ஆயார் செயற்பட்டு வருகின்றார்.கடந்த காலங்களில் வடக்கில் காணாமல் போனர்வகள்,கடத்தப்பட்டவர்களின் நிலை இது வரை என்ன என்று தொரியாத நிலையில் உறவுகள் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவித்து வருகின்ற நிலையில் அந்த மக்களின் துன்ப துயரத்தை நீக்க மன்னார் ஆயார் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றார்.

இதனால் அரசாங்கம் அவருக்கு புலிகளின் தலைவர் என பெயர் சூட்டியிருந்தனர்.

மன்னார் ஆயார் மீது தென்பகுதியில் உள்ள சிங்கள மக்கள் வைத்துள்ள நம்பிக்கையினை தோற்கடிக்கும் முகமாக அவருக்கு புலிகளின் தலைவர் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளமையினை நாம் அறிகின்றோம்.

-இந்த நிலையில் தற்போது மன்னார் மறைமாவட்ட ஆயர்  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆலோசகராக செயற்பட்டு வருவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

-இந்த கருத்தை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம்.மன்னார் மறைமாவட்ட ஆயர் தமிழ் மக்களுக்கு நீதியானதும்,சுதந்;திரமானதுமான ஒரு அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும்.

காணாமல்; போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.அவர்களின் நிலைப்பாடு என்னவென்று வெளிப்படையாக தெரிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் செயற்பட்டு வருகின்றார்.

யுத்தத்தின் போது இலட்சக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டதை அரசாங்கம் மூடி மறைத்துள்ள போது ஆயர் அவர்கள் உண்மைத்தகவலை வெளிக்கொண்டு வந்தார்.

இந்த செயற்பாடுகளின் மத்தியிலே ஆயருக்கு எதிராக பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எனவே தமிழ் மக்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வரும் மன்னார் மறைமாவட்ட ஆயார் தொடர்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்த கருத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வண்மையாக கண்டிப்பதாக குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மன்னார் ஆயர் தொடர்பான கருத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு கண்டனம். Reviewed by Author on December 13, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.