வன்னி மீனவர்கள் பாதிப்புக்குக்கு உள்ளாகி வருகின்றனர்- வினோநோகராதலிங்கம்
வன்னியில் மீனவர்கள் பாரிய பாதிப்புக்குள்ளாகி வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.
மீன்பிடித்துறை தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த முறைப்பாட்டை வெளியிட்டார்.
முல்லைத்தீவு, கிளிநொச்சி மன்னார் என்ற அனைத்து பகுதிகளிலும் மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
தென்னிலங்கை மீனவர்களுக்கு அங்கு புதிதாக மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் பரம்பரையாக உள்ளவர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை.
மன்னாரில் ஏனைய இடங்களில் உள்ளவர்கள் வாடிகள் அமைத்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவிலும் இதேநிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் சகோதர மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்து மீன்பிடிக்கும் விடயத்தை ராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும். அது இலங்கை, இந்திய அரசாங்கங்கள் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
இந்த விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை குற்றம் சுமத்துவது பொருந்தாது என்று வினோநோகராதலிங்கம் கூறினார்.
இதன்போது அமைச்சர் ராஜித சேனாரத்ன, பதில்களை வழங்கிய போதும் அந்த பதில்களில் தமக்கு திருப்தியில்லை என்று வினோ நோகராதலிங்கம் குறிப்பிட்டார்.
அதேவேளை சமுத்திரவியல் தொடர்பான பட்டப்படிப்பு ஒன்றை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.
வன்னி மீனவர்கள் பாதிப்புக்குக்கு உள்ளாகி வருகின்றனர்- வினோநோகராதலிங்கம்
Reviewed by Admin
on
December 13, 2013
Rating:
Reviewed by Admin
on
December 13, 2013
Rating:


No comments:
Post a Comment