பா.உ.சிவசக்தி ஆனந்தனை முன் உதாரணமாக கொண்டு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் மன்னார் மாவட்டத்திற்காக மேற்கொண்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை பகிரங்கப்படுத்தவும் -மன்னார் இணையம்
பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களினால் கடந்த வருடம் மன்னார் மாவட்டத்துக்கென அவருடைய பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து மாவட்டத்தின் அபிவிருத்திக்கென நிதி ஒதுக்கப்பட்டிருந்தது . இதன்படி 2013 ம் ஆண்டுக்கென மன்னார் மாவட்டத்துக்கு மொத்தமாக ரூபா 1,720,000.00 செலவிடப்பட்டுள்ளது .
அதாவது மன்னார் பிரதேசசெயலகம் ,நானாட்டான் பிரதேச செயலகம் ,முசலி பிரதேச செயலகம் போன்ற பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்திக்கு இந் நிதி செலவிடப்பட்டிருந்தது வரவேற்கத்தக்கது.இவ் பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகள் இவ் நிதி ஒதுக்கீட்டினால் நன்மை பெற்றுள்ளன.இச் செயற்பாட்டிற்கு மன்னார் இணையமும் மன்னார் மக்களும் நன்றியை தெரிவிக்கின்றனர்
மன்னார் மாவட்டமானது 5 பிரதேச செயலகங்களை கொண்டது.
1.மன்னார் பிரதேசசெயலகம்
2.முசலி பிரதேசசெயலகம்
3.மாந்தைமேற்கு பிரதேசசெயலகம்
4.நானாட்டான் பிரதேசசெயலகம்
5.மடு பிரதேசசெயலகம்
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களால் மன்னார் பிரதேசசெயலகம், முசலி பிரதேசசெயலகம், நானாட்டான் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு மாத்திரம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது ஆனால் மாந்தை மேற்கு, மடு பிரிவுகளுக்கு நிதி ஒதுக்கப்பட வில்லை பெருமளவில் போரினாலும் பாதிக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகளிலும் பின் தங்கி காணப்படுகின்றது இப் பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் எவ்வித அபிவிருத்தி நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை எனவே எதிர் காலத்திலாவது இப் பகுதிகளிற்கும் உதவிகளை வழங்குமாறு மன்னார் இணையம் கேட்டுக்கொள்கின்றது.

தொடர்புடைய செய்தி
பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 2013ம் ஆண்டிற்கென செலவிடப்பட்ட நிதி அறிக்கை வெளியீடு
பா.உ.சிவசக்தி ஆனந்தனை முன் உதாரணமாக கொண்டு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் மன்னார் மாவட்டத்திற்காக மேற்கொண்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை பகிரங்கப்படுத்தவும் -மன்னார் இணையம்
Reviewed by Admin
on
January 08, 2014
Rating:

No comments:
Post a Comment