அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபா விசேட முற்பணக் கொடுப்பனவுகளை வழங்க பணிப்புரை.
அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபா விசேட முற்பணக் கொடுப்பனவுகளை வழங்குமாறு சகல
திணைக்கள தலைவர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது .
பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன் , இதற்கான சுற்றுநிருபம் சகல திணைக்களங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .
அடுத்த மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னதாக இந்தக் கொடுப்பனவுகள் யாவும் வழங்கப்படுதல் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது .
வருட ஆரம்பத்தில் அரச ஊழியர்களுக்கு ஏற்படும் பிள்ளைகளின் கல்விச் செலவு மற்றும் அத்தியாவசிய செலவுகளை ஈடுசெய்யும் விதத்தில் இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுவருகின்றன .
வழங்கப்படுகின்ற விசேட கொடுப்பனவானது , மாதாந்த சம்பளத்திலிருந்து தவணைக் கட்டண அடிப்படையில் மீள அறவிடப்படவுள்ளது .
அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபா விசேட முற்பணக் கொடுப்பனவுகளை வழங்க பணிப்புரை.
Reviewed by NEWMANNAR
on
January 16, 2014
Rating:

No comments:
Post a Comment