அண்மைய செய்திகள்

recent
-

கண்டாவளையில் 2,000 ஏக்கர் நெற்செய்கை அழிவு

கிளிநொச்சி, கண்டாவளைப் பகுதியில் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்செய்கையில், மழையின்மையினால் நிலவிய வறட்சி காரணமாக சுமார் 2000 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக கண்டாவளை விவசாய அமைப்பு இன்று (23) தெரிவித்தது. 
கிளிநொச்சி, கண்டாவளை கிராம அலுவலர் பிரிவின் கீழுள்ள பதினொரு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இவ்வாண்டு காலபோக நெற்செய்கையினை மேற்கொண்டிருந்தனர். 

 இருந்தும் அவர்களின் நெற்செய்கைக்கேற்ற பருவமழை வீழ்ச்சி இவ்வருடம் கிடைக்காமையினால் அவற்றில் 85 சதவீதமான நெற்செய்கை அழிவடைந்துள்ளது. 

 இந்த அழிவினால் விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைப்பு மேலும் தெரிவித்தது.
கண்டாவளையில் 2,000 ஏக்கர் நெற்செய்கை அழிவு Reviewed by NEWMANNAR on January 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.