வி.ஐ.பி., வி.வி.ஐ.பி. களுக்குத் தடை
வாகனங்களில் வி.ஐ.பி. மற்றும் வி.வி.ஐ.பி. என பெயர் பொறிக்கப்பட்டு வீதிகளில் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மேலும் வீதிகளில் வி.ஐ.பி. மற்றும் வி.வி.ஐ.பி. என பெயர் பொறிக்கப்பட்ட வாகனங்களிலிருந்து குறித்த பெயர்களை அகற்றும் நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பெயர்கள் பொறிக்கப்ட்டுள்ள வாகனங்கள் மூலம் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிடைத்துள்ள முறைப்பாடுகளை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வி.ஐ.பி மற்றும் வி.வி.ஐ.பி. போன்ற பெயர்கள் பொறிக்கப்பட்ட வாகனங்கள் வீதிகளில் பயணிக்க முடியாது.
அவ்வாறு பயணிப்பவர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வி.ஐ.பி., வி.வி.ஐ.பி. களுக்குத் தடை
Reviewed by Admin
on
January 06, 2014
Rating:

No comments:
Post a Comment