அண்மைய செய்திகள்

recent
-

நெடுங்கேணியில் பேரூந்துகளை மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நிறுத்துமாறு கோரிக்கை

வவுனியா நெடுங்கேணியூடாக செல்லும் பேரூந்துகளை நெடுங்கேணியில் அமைந்துள்ள மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நிறுத்துமாறு வவுனியா வடக்கு பிரதேச சபையின் உப தலைவர் எஸ். தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"நெடுங்கேணியில் மத்திய பேரூந்து தரிப்படம் தேவை என்பதனை கருத்தில் கொண்டு பல இலட்சம் ரூபா செலவில் பஸ் தரிப்பிடம் அமைக்கப்பட்டதுடன் கடைத்தொகுதிகளும் அமைக்கப்பட்டு அமைச்சர் றிசாத் பதியுதினினால் திறந்துவைக்கப்பட்டது.

எனினும் இதுவரை காலமும் இந்த தரிப்பிடத்தில் பேரூந்துகள் தரிக்காததுடன் விதியோரங்களில் தரிக்கப்படுகின்றது. இது போக்குவரத்துக்கு இடையூராக காணப்படுவதுடன் பயணிகளுக்கும் சிரமமாகவுள்ளது. அத்துடன் மத்திய பேரூந்து நிலையத்தை மையப்படுத்தி பொதுச்சந்தையும் அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

இது விவசாய பிரதேசமான வவுனியாவில் விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு இலகு தன்மை கருத்தி அமைக்கப்பட்டதாகும். இவ்விடயம் தொடர்பான எமது பிரதேச சபையினால் இலங்கை போக்குவரத்து சபைக்கும் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்திற்கும் அறிவிக்கப்பட்ட போதிலும் அதன் முகாமைத்துவம் உரிய நடவடிகைகளை இதுவரை மேற்கொள்ளவில்லை.

இவ்வாறான நிலையில் இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேரூந்துகளோ தனியார் பேரூந்துகளோ மத்திய தரிப்பிடத்தில் நிறுதுத்தாமல் வீதியோரத்தில் நிறுத்தப்படுவது இனி வரும் காலங்களில் தடுக்கப்பட வேண்டும்" என்றார்.

நெடுங்கேணியில் பேரூந்துகளை மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நிறுத்துமாறு கோரிக்கை Reviewed by NEWMANNAR on January 27, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.