மன்னாரில் கழிவுப்பொருட்களை கொட்ட நிரந்தரமான இடம் ஒதுக்கப்பட வேண்டும். நகர சபை உறுப்பினர் குமரேஸ்.
மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மன்னார் நகர சபையின் சுத்திகரிப்பு பணியாளர்களினால் அகற்றப்படுகின்ற கழிவுப்பொருட்களை கொட்டுவதற்கு நிரந்தரமான ஒரு இடத்தை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஒதுக்கித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார் .
மன்னார் நகர சபை சுற்றிகரிப்பு பணியாளர்களினால் அகற்றப்படுகின்ற கழிவுப்பொருட்கள் மன்னார் பட்டித்தோட்டம் பகுதியில் உள்ள தனியார் ஒருவருடைய தென்னம் தோட்டப்பகுதியில் இது வரை காலமும் கொட்டப்பட்டு வந்தது .
எனினும் அப்பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்ட நிலையில் பொது சுகாதார பரிசோதகர்கள் அங்கு கழிவுப்பொருட்களை கொட்ட அனுமதி மறுத்திருந்தனர் .
இந்த நிலையில் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ் . ஞானப்பிரகாம் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் மன்னார் அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் மன்னார் சௌத்பார் பகுதியில் குறித்த கழிவுப்பபொருட்களான குப்பை கூழங்களை கொட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்தது .
இந்த நிலையில் மன்னார் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை முதல் மதியம் வரை 5 குப்பை வண்டிகளில் சேகரிக்கப்பட்ட குறித்த கழிவுப்பொருட்களை சௌத்பார் பகுதியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்டுவதற்கு கொண்டு செல்லப்பட்ட போது உடனடியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரினால் அனுமதி மறுக்கப்பட்டது .
இதனால் குறித்த கழிவு அகற்றும் வண்டிகள் கழிவுப்பொருட்களுடன் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் நிறுத்தப்பட்டது . இந்த நிலையில் மன்னார் நகர சபை செயலாளர் , தலைவர் , உறுப்பினர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்று அரச அதிபருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பலனாக தற்காலிகமாக குறித்த பகுதியில் கழிவு பொருட்களை கொட்ட அனுமதி வழங்கப்பட்டது .
பின் அவ்விடத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட குறித்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்பட்டது . எனினும் நிறந்தரமாக குப்பைகளை கொட்ட இடம் வழங்கினால் மாத்திரமே தொடர்ச்சியாக கழிவுகளை அகற்ற முடியும் என நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் மேலும் தெரிவித்தார் .
மன்னாரில் கழிவுப்பொருட்களை கொட்ட நிரந்தரமான இடம் ஒதுக்கப்பட வேண்டும். நகர சபை உறுப்பினர் குமரேஸ்.
Reviewed by NEWMANNAR
on
January 27, 2014
Rating:

No comments:
Post a Comment