மன்னார் மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை. [படங்கள் இணைப்பு]
மன்னார் கடல் வழியாக உருவாகும் தாழமுக்கம் முல்லைத்தீவு கடல் வழியாக காங்கேசன்துரையை
கடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்ட மீனவர்கள் இன்று திங்கட்கிழமை காலை கடற்தொழிலுக்குச் செல்லவில்லை .
- மன்னாரில் தொடர்ந்தும் மழை பெய்து கொண்டிருப்பதோடு கடற்காற்றும் வீசி வருகின்றது .
இந்த நிலையில் மன்னார் மாவட்ட மீனவர்களை மறு அறிவித்தல் வரை கடல் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்தல் வழங்கியுள்ளனர் .
இந்த நிலையில் எந்த மீனவர்களும் தொழிலுக்குச் செல்லவில்லை . தொழிலுக்குச் சென்ற மீனவர்களை கடற்படையினர் திருப்பி அனுப்பியுள்ளனர் .
- இதே வேளை மன்னார் மாவட்டத்தில் கடற்கரைப்பகுதிகளில் உள்ள மக்களை வேறு இடத்திற்குச் செல்லுமாறு மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவு ஒலி பெருக்கி மூலம் அறிவித்தல்களை வழங்கியுள்ளனர் .
மன்னார் மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை. [படங்கள் இணைப்பு]
Reviewed by Admin
on
January 06, 2014
Rating:

No comments:
Post a Comment