அண்மைய செய்திகள்

recent
-

யாழ். அரியாலை ஏழிசை மிருதங்க நர்த்தனாலயத்தில் நடன ,மிருதங்கக் கலை மாணவர்களின் கலை விழா

யாழ். அரியாலை ஏழிசை மிருதங்க நர்த்தனாலயத்தில் கல்வி பயிலும் நடன மற்றும் மிருதங்கக் கலை மாணவர்களின் கலை விழா 01.02.2014 சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 

கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைத் தலைவர் பேராசிரியர் மா.வேதநாதனும் சிறப்பு விருந்தினர்களாக கலாகீர்த்தி திருமதி சாந்தினி சிவனேசன், தண்ணுமை வேந்தன் மா.சிதம்பரநாதன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மிருதங்க விரிவுரையாளர் க.கண்ணதாசன், சுண்டுக்குளி மகளிர் கல்லூரி நடன ஆசிரியை பாலினி கண்ணதாசன் ஆகியோரது நெறிப்படுத்தலில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் சாஸ்த்திரியக் கலை சார்ந்த கலை ஆற்றுகைகள் இடம்பெறவுள்ளன.

யாழ். அரியாலை ஏழிசை மிருதங்க நர்த்தனாலயத்தில் நடன ,மிருதங்கக் கலை மாணவர்களின் கலை விழா Reviewed by NEWMANNAR on January 30, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.