புகைத்தலுக்கு எதிரான தினம் இன்று
புகைத்தலுக்கு எதிரான தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.
“புகைத்தல் அற்ற ஆரோக்கியமான பரம்பரையை உருவாக்குதல்” இந்த வருடத்திற்கான தொனிப்பொருளாகும்.
புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
சிகரெட் பாவனை உள்ளிட்ட விடயங்களால் இலங்கையில் நாளாந்தம் சுமார் 60 பேர் உயிரிழப்பதாக சுகாதார கற்கைகள் நிறுவகத்தின் விசேட வைத்திய நிபுணர் உத்பலா அமரசிங்க குறிப்பிட்டார்.
அத்துடன், வருடாந்தம் 20,000 பேர் புகைத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளினால் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
சிறார்கள், இளைஞர்கள் புகைத்தல் பழக்கத்திற்கு அடிமையாவதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது அனைவரினதும் பொறுப்பென அவர் சுட்டிக்காட்டினார்.
புகைத்தலால் பல்வேறு சுகாதார பிரச்சினைகள் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
புகைப்பிடிக்கும் ஒருவரால், அவருக்கு மாத்திரமன்றி, அவரை சூழவுள்ள அனைவருக்கும் சுகாதார ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படுவதாக, சுகாதார கற்கைகள் நிறுவகத்தின் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்தார்.
புகைத்தலால் கர்ப்பிணிகள், சிறார்கள் என அனைவருக்கும் சிக்கல்கள் ஏற்படுவதாக உத்பலா அமரசிங்க மேலும் தெரிவித்தார்.
புகைத்தலுக்கு எதிரான தினம் இன்று
Reviewed by Admin
on
January 13, 2014
Rating:
Reviewed by Admin
on
January 13, 2014
Rating:


No comments:
Post a Comment