ஓய்வு பெற்ற மன்னார் மாவட்டத்தின் தபாலதிபர்கள் கௌரவிப்பு
மன்னார் மாவட்டத்தில் உப தபாலதிபராக கடமை புரிந்த நான்கு பேர் அண்மையில் தங்கள் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றுள்ளனர். இவர்களில்
திரு. லோ.கொன்சால் வாஸ் கூஞ்ஞ இவர் தலைமன்னார் பியர் உப தபாலதிபராக 33 வருடங்கள் கடமையாற்றியதுடன் நீண்ட காலமாக மன்னார் மாவட்ட உப தபால் அதிபர் சங்க தலைவராகவும் அகில இலங்கை தமிழ் பேசும் உப தபால் அதிபர் சங்கத்தின் உப தலைவராகவும் இருந்து வந்ததுடன் ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளருமாவார்
திருமதி.கோமதி பஞ்சலிங்கம் இவர் ஆண்டான்குளம் உப தபாலதிபராக கடமை புரிந்தவர்.
திருமதி.தர்மலிங்கம் லெட்சுமி இவர் பெரியபண்டிவிரிச்சான் உப தபாலதிபராக கடமை புரிந்தவர்.
திரு.ச.அல்போன்ஸ் இவர் பெரிய குஞ்சுக்குளம் உப தபாலக அதிபராக இருந்து ஓய்வு பெற்றவராவர்.
தபாலதிபராக இருந்து ஓய்வு பெற்றுச் சென்ற இந்த நான்கு பேருக்கும் அகில இலங்கை தமிழ் பேசும் மன்னார் மாவட்ட உப தபாலதிபர் சங்கம் வியாழக் கிழமை (23.1.2014) அடம்பன் உப தபாலக கேட்போர் கூடத்தில் சேவை நலன் பாராட்டி கௌரவிப்பு விழா நடாத்தியது.
இவ் விழாவில் மன்னார் மாவட்ட பெரும்பாக தபால் அத்தியட்சகர் திரு.எஸ்.nஐகன் அவர்களும் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Reviewed by Author
on
January 24, 2014
Rating:

No comments:
Post a Comment