திருக்கேதீஸ்வரத்தில் இன்றுடன் 60 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு –படங்கள்
மன்னார் திருக்கேதீஸ்வர பகுதியில் மேற்கொள்ளப் பட்டுவரும் மனித புதைகுழி அகழ்வுப் பணி இன்று புதன் கிழமையும் (12.2.14) தொடர்ந்து இடம்பெற்றபோது மேலும் இரண்டு மண்டையோடுகளும் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனை அடுத்து எலும்புகூடுகளின் எண்ணிக்கை அறுபதாக (60) உயர்ந்துள்ளன.
மன்னார் திருக்கேதீஸ்வரப் பகுதியில் மேற்கொள்ளப் பட்டுவரும் மனித புதைகுழி அகழ்வுப் பணி இன்று புதன் கிழமை இருபத்திரண்டாவது தடவையாக நடைப்பெற்றது.
குறித்த பகுதியில் மனித எச்சங்களை நோக்கிய மண் அகழ்வுப் பணியின்பொது குழிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளின் நிலைகளை அளவுடும் பணி எலும்புக் கூடுகளை துப்பரவு செய்யும் பணி பின் அவைகளை பாதுகாப்பான முறையில் பெட்டிக்குள் பொதிசெய்யப்பட்டு நீதிபதியின் முன் ஆஐர்படுத்தியபின் அவற்றை பாதுகாப்பாக உரிய இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது
கடந்த வருடம் 20 ந் திகதி திருக்கேதீஸ்வரம் கோவில் மாந்தை வீதிக்கு அருகாமையில் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் நிலத்தடியில் குழாய்கள் பதித்து சென்ற வேளையிலேயே இவ் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேரில் சென்று பார்வையிட்ட மன்னார் மாவட்ட நீதிபதி ஆனந்தி கனகரட்ணம் அனுராதபுரத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சட்ட வைத்திய நிபுணர் டீ.எல்.வைத்தியரத்தினவுடன் கலந்து ஆலோசிக்கப்பட்ட பின் டிசம்பர் மாதம் 23 ந் திகதியிலிருந்து இவ் மனித புதைகுழியை அகழ்வு செய்யும்படி மன்னார் நீதிபதி உத்தரவுட்டிருந்தார்.
குறித்த தினத்திலிருந்து இன்று (12.2.14) வரை 22வது தடவையாக இவ் மனித புதைகுழி அகழ்வுப் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இன்றுவரை 60 மண்டையோடுகளும் மனித எச்சங்களும் கண்டுபடிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கண்டுபிடிக்கப்பட்டு குழிக்குலிருந்து வெளிகொணரப்பட்ட 36 மனித எலும்புக்கூடுகள் பெட்டிக்குள் பொதிசெய்யப்பட்டுள்ள நிலையில் நீதிபதியின் முன் ஆஐர்படுத்தப்பட்டு ஆய்வுக்கு கொண்டு செல்லும் நோக்குடன் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்டுள்ள பிரத்தியேக அறை ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இவ் அகழ்வு பணியானது மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் சட்ட வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி டீ.எல்.வைத்தியரத்தின ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் வடமத்திய மாகாண தொல்பொருள் ஆராய்ச்சி உத்தியோகத்தாகள் சட்ட வைத்திய அதிகாரிகள் உட்பட பொலிசாரும் இணைந்து இவ் அகழ்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கான வெளிவேலைகளை அப்பகுதி கிராம அலுவலகர் J.J.லெம்பேட் கவனித்து வருவதுடன் குற்றத் தடுப்பு புலணாய்வு பிரிவினரும் இங்கு நடைபெறும் நிகழ்வுகளையும் கண்காணித்து வருகின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
February 12, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment