இந்துக்கள் ஏனைய மதத்தவர்களுடன் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர் – ஜனாதிபதி
இலங்கையிலுள்ள இந்துக்கள் ஏனைய மதத்தவர்களுடன் நூற்றாண்டு காலமாக சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருவதாக மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விடுத்துள்ளவாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவராத்திரி விரதத்தை ஒற்றுமையுடனும், புரிந்துணர்வுடனும், அனுஷ்டிப்பதற்கான அமைதியான சூழ்நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
சிவராத்திரி விரதத்தின் வழிபாடுகளின் ஊடாக தாய்நாட்டிலுள்ள அனைத்து இன மக்களுக்கு இடையிலும் காணப்படும் சமாதானம் மற்றும் ஒற்றுமையுடன் கூடிய அர்ப்பணிப்பு மேலும் வலுப்பெறும் ஜனாதிபதி தமது வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்துக்கள் ஏனைய மதத்தவர்களுடன் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர் – ஜனாதிபதி
Reviewed by NEWMANNAR
on
February 27, 2014
Rating:

No comments:
Post a Comment