பெற்ற மகனின் வாய்க்கு பூட்டு போட்டு அடித்துக் கொன்ற தந்தை
நான்கு வயது மகனுக்கு வாயில் பூட்டு போட்டு தந்தை ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவை சேர்ந்தவர் சேரிஸ் எலிவிஸ்(வயது 30), என்பவரது மகன் காட்ரிச் எலிவிஸ்.
கடந்த 10ம் திகதி எலிவிஸின் மனைவி கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது மகனை காணவில்லை, இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
பொலிசார் வந்து சோதனை நடத்திய போது தான், எலிவிஸ் தனது 4 வயது மகனை கடுமையாக தாக்கி கொலை செய்து உள்ளது தெரியவந்துள்ளது.
அடி தாங்காமல் சிறுவன் கதறுவதை தடுக்க அவனது வாய்க்கு தந்தை பூட்டு போட்டு உள்ளார். இதை தொடர்ந்து பொலிசார் எலிவிஸை கைது செய்தனர்.
எலிவிஸ் மீது கொலை வழக்கு பதிவுசெய்துள்ள பொலிசார், சிறையில் அடைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டதுமே பைத்தியக்காரன் போன்று நடித்த எலிவிஸ், நல்ல நிலையில் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பெற்ற மகனின் வாய்க்கு பூட்டு போட்டு அடித்துக் கொன்ற தந்தை
Reviewed by NEWMANNAR
on
February 27, 2014
Rating:

No comments:
Post a Comment