இரணைமடுக்குள நீரை யாழ்.குடாவிற்கு வழங்கும் திட்டம் இராணுவத் தேவைக்கே : ஸ்ரீதரன் எம்.பி.
இரணைமடுக்குளத்தில் இருந்து நீரை யாழ் குடாநாட்டிற்க்கு கொண்டுவர வேண்டும் என்ற துடித்து நிற்பது யாழ் குடாநாட்டு மக்களின் நன்மை கருதி அல்ல இங்குள்ள இராணுவ முகாம்கள் மற்றும் எதிர் காலத்தில் இடம் பெற அரசு திட்டம் தீட்டியுள்ள சிங்கள குடியேற்றத்திற்கும் குடி நீர் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இன்று நடைபெறும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன என்பதை தமிழ் மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சியில் வாழ்பவர்களும் கூட யாழ்ப்பாணத்து மக்களே என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் வேறு கிளிநொச்சியில் உள்ள மக்கள் வேறு என யாரும் கருதக்கூடாது. இன்று சிங்கள பேரினவாத அரசாங்கமும் அரசுடன் தொடர்புடைய உடுகங்களும் பிரதேச வாதத்தை வளர்க்கும் வகையில் திட்டமிட்டு செயல்படுகின்றார்கள்.
இது எதிர் காலத்தில் சிங்கள பேரினவாதத்தின் இன அழிப்பக்கு நாம் இடம் கொடுத்தவர்கள் ஆவோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எந்த வொரு சந்தர்ப்பத்திலும் கிளிநொச்சி மக்கள் யாழ்ப்பாணத்திறக்கு குடி நீர் கொடுக்க வேண்டாம் என்று கூறியவர்கள் அல்ல.
அவர்கள்வேண்டுவது எல்லாம் பெரும் போகத்தில் 24 ஆயிரம் ஏக்கர் காணியில் நெற்செய்கை மேற்க்கொள்ளக் கூடியதாகவும் சிறு போகத்திலும் கூட பன்னிரெண்டாயிரம் ஏக்கரிலோ பதினெட்டாயிரம் ஏக்கரிலோ நெல் செய்வதற்கான நீரை வழங்க உறுதி மொழி தந்துவிட்டு செய்யுங்கள் என்பதே ஆகும்.
இதற்கு யாரும் தயாராக இல்லை. எதிர் காலத்தைப் பற்றிக் கேட்டால் பதில் கூறுவதற்க்கோ அன்றி உத்தரவாதம் தருவதற்க்கோ யாரும் தயாராக இல்லை. ஆனால் தாம் பெறும் சம்பளத்தை உரிய முறையில் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளையே உரிய அதிகாரிகள் மேற்கொள்கின்றார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இரணைமடுக்குள நீரை யாழ்.குடாவிற்கு வழங்கும் திட்டம் இராணுவத் தேவைக்கே : ஸ்ரீதரன் எம்.பி.
Reviewed by NEWMANNAR
on
February 13, 2014
Rating:

No comments:
Post a Comment