இரணைமடுவில் விபத்து. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலி.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில்
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலியானார் .
இரணைமடு சந்தியில் நடைபெற்ற அவ் விபத்தில் வவுனியா குட்செற் வீதியைச் சேர்ந்த கந்தையா ரகுநாதன் ( 44 ) என்பவர் உயிரிழந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் வீதியின் மருங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதியதிலே இவ் விபத்து இடம்பெற்றதாகவும் , வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .
இரணைமடுவில் விபத்து. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலி.
Reviewed by NEWMANNAR
on
February 09, 2014
Rating:

No comments:
Post a Comment