இன்றைய விம்பம் பகுதியில் மன்னார் நகரசபையினால் முன்னெடுக்கப்பபடும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான தகவலுடன்
மன்னார் நகரசபை பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக யுத்தத்திற்கு பின்னராக இக் காலப்பகுதியில் நீண்ட வருடங்களுக்கு பின் மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்கள் செயற்படத் தொடங்கியிருந்தன.
இவ்வாறான சூழ்நிலையில் மன்னார் மாவட்டத்தில் கடந்த முறைநடைபெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ் தேசியகூட்டமைப்பு பல சவால்களின் மத்தியில் ஆட்சியை கைப்பற்றியிருந்தது. ஆட்சிக்குவந்த குறித்த உள்ளுராட்சிமன்றம் நிர்வாகத்தை கொண்டு செல்வதில் பல சிக்கல்கள் காணப்பட்டது.
குறிப்பாக ஆட்சியை பிடித்திருந்தாலும் குறித்த ஆட்சியின் போது குறித்த நிர்வாகங்களுக்கு தமது சேவையினை வழங்குவதற்கு அந்தந்த உள்ளுராட்சி மன்றங்களில் போதிய அளவு நிதியிருக்கவில்லை. இவ்வாறான சுழ்நிலையில் பல விமர்சனங்களையும் தாண்டி குறித்த நிர்வாகங்கள் தமது சேவையினை மக்கள் மத்தியில் முன்னெடுத்தது.
இதன்படி மன்னார் நகரசபை இக்காலகட்டத்தில் பல்வேறு திட்டங்களின் ஊடாக நடைமுறைபடுதிவந்த விடயங்களை சிறப்பான முறையில்முன்னெடுத்து அதன்மூலம் பெறப்பட்ட நிதியினை நகர அபிவிருத்திக்கென செலவிட்டுவருகிறது.
இதற்கு உறுதுணையாக அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் மன்னார் நகர சபைக்கு அனுசரணைவழங்கிவருகிறது.
இதன் அடிப்படையில் உள்ளக வீதிகள், கடைத்தொகுதிகள்,பொது மலசலகூடங்கள்,தனியார் போக்குவரத்து நிலையம்,சேமக்காலை புனரமைப்பு, களிவு பொருட்களை பசளையாக்கும் திட்டம்,மன்னார் சிறுவர் பூங்கா அபிவிருத்தி, கிராமங்களின் உள்ளக வீதிகள் கொங்கிறிட் வீதிகளாக தரமுயர்த்தல், தாழ்நிலபகுதியில் வடிகான் அமைப்புகள் போன்ற பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இதேவேளை 500கும் அதிகமான தெருவிளக்குகள் மன்னார் நகரசபையின் நிதிக்கூடாக இலங்கை மின்சார சபையுடன் இணைந்து மன்னார் நகரசபைக்கு உட்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து அவற்றை பராமரித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மன்னார் நகரசபையின் உறுப்பினர் இரட்ணசிங்கம்; குமரோஸ் தெரிவிக்கையில் இதேபோல் எனிவரும் காலங்களிலும் பல திட்டங்கள் நகரசபையினால் முன்னெடுக்கப்படவுள்ளதோடு சில விரிவாக திட்டங்கள் தொடர்பாக மன்னார் நகரசபை ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்

Reviewed by Author
on
February 09, 2014
Rating:

No comments:
Post a Comment