நகுலேஸ்வரத்தில் 20 வருடங்களின் பின்னர் கொடியேற்றத்துடன் தேர்த் திருவிழா
மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக யாழ். கீரிமலை நகுலேஸ்வரத்தில் இன்று தேர்த்திருவிழா இடம்பெற்றது.
சுமார் 20 வருடங்களின் பின்னர், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தில் துவாஜாரோஹணம் எனப்படும் கொடியேற்றத்துடன், தேர்த்திருவிழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலையை அடுத்து, அந்த பிரதேசங்களில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டதன் பின்னர் இதுவரை காலமும் கொடியேற்றமின்றி, அலங்கார திருவிழாவுடன் தேர்த் திருவிழா இடம்பெற்றது.
இந்த நிலையில், இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் ஆரம்பமான உற்சவத்தில் இன்று தேர்த் திருவிழா இடம்பெற்றவுடன், இன்றைய பூஜைகளில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
நகுலேஸ்வரத்தில் 20 வருடங்களின் பின்னர் கொடியேற்றத்துடன் தேர்த் திருவிழா
Reviewed by NEWMANNAR
on
February 27, 2014
Rating:

No comments:
Post a Comment