இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்படை எச்சரிக்கை
இந்திய மீனவர்கள் அத்துமீறல்களில் ஈடுபடக் கூடாது என இலங்கைக் கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதன் பின்னரும் சில இந்திய மீனவர்கள் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என கடற்படைத் தளபதி ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தால் கைது செய்ய நேரிடும். அண்மையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 38 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
தடை செய்யப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்படை எச்சரிக்கை
Reviewed by NEWMANNAR
on
February 02, 2014
Rating:

No comments:
Post a Comment