பறக்கும் தங்கச்செம்பை படமெடுத்த மாணவன்
கஹட்டகஸ்திகிலிய, குடாபட்ட பிரதேசத்தில் வானத்தை நோக்கி பறந்துகொண்டிருந்த தங்கச் செம்பொன்றை 14 வயது மாணவனொருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.
கஹட்டகஸ்திகிலிய, குருகல்ஹின்ன தொல்பொருட்கலைத்திணைக்கள வளாகத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலேயே இந்த தங்கச் செம்பு தென்பட்டுள்ளது.
கிருஷாந்த சாமல் பிரேமதிலக்க என்ற மாணவனும், அவரது தாய் மற்றும் பாட்டி ஆகியோர் மாடுகளை அவிழ்ப்பதற்காகச் சென்ற போதே குறித்த மாணவன் இந்த தங்கச் செம்பை கண்டுள்ளான்.
அதனை கையில் எடுக்க அவன் முற்பட்ட போது அது சூரியன் உள்ள திசையை நோக்கி பறக்க ஆரம்பித்ததாகவும் அதன்போதே தன் கையில் இருந்த கையடக்கத் தொலைபேசி மூலம் அதனைப் படம் பிடித்ததாகவும் அம்மாணவன் தெரிவித்துள்ளான்.
பறக்கும் தங்கச்செம்பை படமெடுத்த மாணவன்
Reviewed by NEWMANNAR
on
February 24, 2014
Rating:
(1).jpg)
No comments:
Post a Comment