வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு! வரும் வாரம் வழங்கப்படவுள்ளது
யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சொத்துக்களை இழந்தவர்கள் மற்றும் சேதமடைந்த வழிபாட்டு தலங்களுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்படவுள்ளன. புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு இந்த நஷ்டஈடுகளை வழங்கவுள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் எதிர்வரும் 24ஆம், 25ஆம் திகதிகளில் நஷ்டஈடு வழங்கும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
24ஆம் திகதி முல்லைத்தீவிலும், 25ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலும் நடைபெறவுள்ளன.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 10 வணக்கஸ்தலங்களுக்கு தலா 100,000 ரூபா வீதம் நஷ்டஈடுகள் வழங்கப்படவுள்ளன. 5 கோவில்களுக்கும், 5 கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் இவ்வாறு நஷ்ட ஈடுகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அரசாங்க சேவையாளர்கள் 45 பேருக்கும், சொத்துக்களை இழந்த 40 பேருக்கும், யுத்தத்தால் உயிரிழந்த மற்றும் ஊனமுற்றவர்களின் 131 குடும்பங்களுக்கும் நஷ்டஈடுகள் வழங்கப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், முல்லைத்தீவு மாவட்டத்தில் 38 அரசாங்க சேவையாளர்களுக்கும், சொத்துக்களை இழந்த 48 பேருக்கும், யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் ஊனமுற்றவர்களின் 111 குடும்பங்களுக்கும் நஷ்டஈடுகள் வழங்கப்படவிருப்பதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இந்து ஆலயங்களுக்கான நஷ்டஈடு முல்லைத்தீவு ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலயத்தில் வழங்கப்படவிருப்பதுடன், கிறிஸ்தவ தேவாலயங்களுக்கான நஷ்டஈடு முல்லைத்தீவு கோவில்குடியிருப்பு புனித மேரி ஆலயத்திலும் வழங்கப் படவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 200 நபர்களுக்கான நஷ்டஈட்டுக் காசோலைகள் கரைதுறைபற்று பிரதேச செயலகத்திலும், யாழ் மாவட்டத்தில் யாழ் மாவட்ட செயலகத்திலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈடுகள் இத்தாவில் வேம்படி வித்தியாலயத்திலும் வழங்கப்படவுள்ளன.
வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு! வரும் வாரம் வழங்கப்படவுள்ளது
Reviewed by NEWMANNAR
on
February 22, 2014
Rating:
(13).jpg)
No comments:
Post a Comment