அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மட்டுமன்றி கிழக்கு பகுதியிலும் மேலும் பல புதைகுழிகள். சம்பந்தன்.

மன்னாரில் மாத்திரம் மனிதப் புதைகுழி இல்லை . வடக்கு , கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் எல்லாவற்றிலும் இவ்வாறு புதை குழிகள் இருக்கின்றன . அதற்குரிய தரவுகளும் எம்மிடம் இருக்கின்றன . இதனைப் பகிரங்கப்படுத்த வேண்டிய இடங்களில் - சந்தர்ப்பம் வரும்வேளையில் நாம் உரிய வகையில் எடுத்துக் கூறுவோம் . 

 இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா . சம்பந்தன் நேற்று தெரிவித்தார் . மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் . 

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு : 

 வடக்கு , கிழக்கு யுத்த வன்முறைகளினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது . தமிழ் மக்களை இலக்கு வைத்து கொலைகள் இடம்பெற்றுள்ளன . குறிப்பாக 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வாறான கொலைகள் மேலும் அதிகரித்தன . 

 சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மக்கள் மற்றும் திட்டமிட்ட தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் புதைகுழிகளில் தற்போது எலும்புக்கூடுகளாக இருக்கின்றனர் . அதில் ஒன்றுதான் மன்னார் மனிதப் புதைகுழி . 

இதை விட மேலும் பல மனிதப் புதைகுழிகள் வடக்கு , கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் இருக்கின்றனர் . அதற்குரிய தரவுகளும் எம் வசம் உள்ளன . இவற்றை பகிரங்கப்படுத்த வேண்டிய இடங்களில் எடுத்துச்சொல்வோம் '' - என்றார்
மன்னாரில் மட்டுமன்றி கிழக்கு பகுதியிலும் மேலும் பல புதைகுழிகள். சம்பந்தன். Reviewed by NEWMANNAR on February 13, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.