அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பைப் சேர்ந்த இயக்குநர் பாலுமகேந்திரா மரணம்: திரையுலகினர் இறுதி அஞ்சலி - காணொளி படங்கள் இணைப்பு

இலங்கையைச் சேர்ந்த தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளி பாலுமகேந்திரா ( வயது 74) உடல்நலக் குறைவு காரணமாக இன்று சென்னை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பில் 1934-ல் பிறந்த தமிழரான பாலு மகேந்திரா ஒரு ஒளிப்பதிவாளராகத்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

1977-ல் கோகிலா என்ற கன்னடப் படம் மூலம் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார்.

இந்தப் படம் நேரடியாக தமிழகத்தில் வெளியாகி வெள்ளி விழா கண்டது. தமிழகத்தில் அத்தனை பெரிய வெற்றி பெற்ற கன்னடப் படம் இதுவாகத்தான் இருக்கும். தமிழில் அவர் இயக்கிய முதல் படம் அழியாத கோலங்கள். 

 அந்தப் படத்தில் தொடங்கிய அவரது திரைப் பயணம் ஒரு அழகிய நதியைப் போல தெளிவாக இருந்தது. ஆர்ப்பாட்டமில்லாத, அழகிய வெற்றிகள் மூலம் இந்திய சினிமாவின் முக்கிய படைப்பாளியாக அடையாளம் காணப்பட்டார்.

 அண்மைக்காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இருந்தும், அதை வென்று, தலைமுறைகள் என்ற படத்தை இயக்கி நடித்தார். 

 இந்த நிலையில் இன்று திடீரென்று அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

காணொளி பார்க்க 






மட்டக்களப்பைப் சேர்ந்த இயக்குநர் பாலுமகேந்திரா மரணம்: திரையுலகினர் இறுதி அஞ்சலி - காணொளி படங்கள் இணைப்பு Reviewed by NEWMANNAR on February 13, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.